பிக் பாஸ் தமிழ் 4 (Bigg Boss Tamil 4), அதிகம் பார்க்கப்பட்ட நிகழ்ச்சிகளில் ஒன்று அக்டோபர் 4 (ஞாயிற்றுக்கிழமை) மாலை மிகவும் ஆடம்பரமாக திரையிடப்பட்டது. நிகழ்ச்சியின் போது பல சுவாரஸ்யமான சிறப்பம்சங்கள் இருந்தன. தனது இறுதி உரையில், புகழ்பெற்ற நடிகர்-தொகுப்பாளரான கமல்ஹாசன் (Kamal Haasan), நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் வாக்களிப்பு மற்றும் வெளியேற்றம் இருக்காது என்பதை உறுதிப்படுத்தினார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கமல் மேலும் கூறுகையில், போட்டியாளர்கள் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். ஒருவருக்கொருவர் பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், நிகழ்ச்சியைப் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொள்ளவும் அவர்களுக்கு சிறிது நேரம் தேவைப்படும். வீட்டிலுள்ள போட்டியாளர்களைப் பற்றி மேலும் அறிய பார்வையாளர்களுக்கும் சிறிது நேரம் தேவைப்படுகிறது. இது தொடர்பான விவரங்கள் பிக் பாஸ் மூலம் அனைவருக்கும் தெளிவுபடுத்தப்படும்.


 


ALSO READ | Bigg Boss Tamil 4: வரவிருக்கும் நிகழ்வைப் பற்றி இதுவரை நாம் அறிந்தவை இங்கே


இது தவிர, கோவிட் -19 தொற்றுநோய் மற்றும் அது அனைவரின் வாழ்க்கையிலும் கொண்டு வந்த மாற்றங்கள் குறித்து கமல்ஹாசன் பார்வையாளர்களுக்கு சில செய்திகளைப் பகிர்ந்து கொண்டார். இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையை கமல் பகிர்ந்து கொண்டார். கடந்த கால தவறுகளிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். கொரோனா வைரஸ் போன்ற வைரஸ்கள் கடந்த காலங்களில் கூட மனிதகுலத்தைத் தாக்கியுள்ளன. அவற்றைப் பற்றி நாம் அதிகம் தெரிந்து கொள்ள வேண்டும், நம் வாழ்க்கையில் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டும். முன்னர் செய்த தவறுகளை மீண்டும் செய்யக்கூடாது என்பதற்காக வரலாற்றை முக்கியமாக நினைவில் கொள்கிறோம் என்றார்.


ALSO READ | Bigg Boss Tamil 4: இந்த சீசனில் உறுதிப்படுத்தப்பட்ட போட்டியாளர்களின் பட்டியல்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!