பிக்பாஸ் முதல் நாமினேசன்; இவர்தான் டார்கெட்- Watch
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது.
Bigg Boss Tamil Season 5: தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் 4 சீசன்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் 5 வது (Bigg Boss Tamil) சீசன் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக கலகலப்பாக சென்றது. இது பார்வையாளர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ | பிக்பாஸ் ஐந்தாம் சீசனின் போட்டியாளர்களின் புகைப்படத் தொகுப்பு
இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், முதல் நாமினேஷன் பிராசஸ் நடைபெறுகிறது. இந்த பிக்பாஸ் சீசன் 5ல் முதல் நாமினேஷன் பிராசஸ் நடைபெறுகிறது. அதன்படி முதலில் இசைவானியை அக்சரா நாமினேட் செய்கிறார். அக்சராவை அபிஷேக் நாமினேட் செய்கிறார். இமான் அண்ணாச்சி, அபினய்யை நாமினேட் செய்கிறார். அபினய், இசைவாணியை நாமினேட் செய்கிறார்.
இன்றைய முதல் ப்ரோமோவை பார்க்கும்போது இசைவாணியை பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் டார்கெட் செய்து நாமினேஷன் செய்வது போல் தெரிகிறது. இருப்பினும் இன்றைய நிகழ்ச்சியில் யார் யார் நான் செய்யப்படுகின்றனர் என்பதை இன்று இரவு பொறுத்திருந்து பார்ப்போம்.
முன்னதாக கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நமிதா மாரிமுத்து என்ற திருநங்கை பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து திடீரென விலகினார். கடந்த வாரம் திருநங்கைகள் படும் துயரத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கண்ணீர் மல்க நமிதா மாரிமுத்து பேசியிருந்தார். இதனை அடுத்து, பார்வையாளர்கள் மத்தியிலும், இணையதளவாசிகளிடமும் நமிதா மாரிமுத்துவிற்கு ஆதரவு பெருகியது என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | Biggboss 5: பிக்பாஸ் நிகழ்ச்சியில் திருநங்கை நமீதாவின் கண்ணீரும், கலைஞர் கருணாநிதியும்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR