பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரே களபேரத்தின் உச்சமாக இருந்தது. லக்ஷூரி பட்ஜெட் டாஸ்கில் கொடுக்கப்பட்ட பொம்மை டாஸ்கில் அனல் பறந்தது. ஒருவரையொருவர் தள்ளிக்கொண்டும், முட்டி மோதிக் கொண்டனர். வார்த்தையால் மட்டுமல்ல, கையாலும் தள்ளி அடிதடி போட்டுக் கொண்டனர். இது ரசிகர்களுக்கு நல்ல விறுவிறுப்பாக இருந்த நிலையில், வார இறுதியில் வீட்டுக்கு வந்திருக்கும் கமல், போட்டியாளர்களை சந்தித்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அரங்கேறிய கூத்துகள் குறித்து விலாவரியாக பேசியுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ரஜினியை சந்தித்த லாரன்ஸ்... 


பொம்மை டாஸ்க்கின்போதே ஷெரினாவை யார் தள்ளிவிட்டது என்பதில்தான் சண்டை மூண்டது. அப்போது அங்கிருந்த அசீம், தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளிவிட்டது என குற்றம்சாட்டியதுடன், நீயெல்லாம் ஒரு பொண்ணா என கசப்பான வார்த்தையில் ஆவேசத்தை கொட்டித் தீர்த்தார். அதுமட்டுமல்லாமல் தனலட்சுமியை தள்ளிவிட்டு கூடாரத்துக்குள் சென்றதும் சர்ச்சையானது. தனலட்சுமியே, அவன் எங்க கைய வைச்சு தள்ளினான் தெரியுமா?, அவனை சும்மா விட மாட்டேன் என ஏக வசனத்தில் அசீமை திட்டினார். 



இந்த எபிசோடை பார்த்த ரசிகர்கள் அப்போதே இந்த வாரம் கமல்ஹாசனிடம் கச்சேரி இருக்கிறது என அடித்துக் கூறினர். அதன்படியே, ஷெரினாவை யார் தள்ளிவிட்டது? என்ற பிரச்சனை குறித்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் பேசியிருக்கிறார் கமல்ஹாசன். அந்த புரோமோவை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. அதில், நான் ஷெரீனாவை தள்ளிவிடவில்லை என கூறும் தனலட்சுமி, குறும்படம் போடுமாறு கமலிடம் வலியுறுத்துகிறார். கமலும் அவரின் ஆசைக்காக குறும்படம் உங்களுக்காக பாருங்கள் என போட்டுவிடுகிறார். பிக்பாஸ் வீட்டில் இந்த எபிசோடில் போடப்பட்ட முதல் குறும்படத்தை பார்க்க ரசிகர்களும் ஆர்வமாக இருக்கின்றனர். 


மேலும் படிக்க | கமலால் கடனாளி ஆனேனா?... முற்றுப்புள்ளி வைத்த லிங்குசாமி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ