வெற்றிகரமாக 50-வது நாளை தாண்டியது நடிகர் விஜய்-ன்.........?
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வெற்றிகரமாக தனது 50-வது நாளினை எட்டியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பிகில். இத்திரைப்படம் வெற்றிகரமாக தனது 50-வது நாளினை எட்டியுள்ளது.
இந்நிலையில் படத்தில் வெற்றிக்கு உருதுணையாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இதுகுறித்து AGS சினிமாவின் தலைமை செயல் அதிகாரி அர்ச்சணா கல்பாதி தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில்., பிகில் பாக்ஸ் ஆபிஸில் 50 நாட்களை பூர்த்திசெய்து, உலகெங்கிலும் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்படமாக திகழ்கிறது, படத்தை நேசித்த மற்றும் உங்களுக்கு அருகிலுள்ள திரையரங்குகளில் பார்த்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
அட்லி- விஜய் கூட்டணியில் மூன்றாவது முறையாக வெளியான திரைப்படம் பிகில். இத்திரைப்படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ஜாக்கி ஷெராப், விவேக், பரியேறும் பெருமாள் கதிர், மொட்ட ராஜேந்திரன், டேனியல் பாலாஜி, யோகிபாபு, இந்துஜா, ரெபா மோனிகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தில் அப்பாவாக நடித்திருந்த நடிகர் விஜய்யை ரசிகர்கள் பெரிதும் ரசித்தனர். அதேபோல் ராயப்பனின் முந்தைய வாழ்க்கையை படமாக்கும் எண்ணமிருக்கிறதா என்றும் இயக்குநர் அட்லியிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவிற்கு பிகில் விஜய் ரசிகர்களின் மனதில் நிலைத்து நின்றுள்ளார். இந்நிலையில் இன்று இத்திரைப்படம் உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டு தனது 50-வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் படத்தில் வெற்றிக்கு உருதுணையாக இருந்த ரசிகர்கள் அனைவருக்கும் படக்குழுவினர் நன்றி தெரிவித்துள்ளனர்.