மான் வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைவாசம், 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதனால் பாலிவுட் திரையுலகம் ஏறகுறைய 500 கோடி இழப்பினை சந்திக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பாலிவுட் பிரபலம் சல்மான் கான் மானை வேட்டையாடியதாக தொடுக்கப்பட்ட வழக்கு 20 ஆண்டுகளாக இழுத்தடிக்கப் பட்டு வந்த நிலையில் இன்று இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.


தற்போது இவருக்கு சிறைவாசம் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பாலிவுட்டின் பல படங்கள் தடைப் பட வாய்புள்ளது. இதனால் சுமார் 500 கோடி ரூபாயினை பாலிவுட் இழக்க நேரிடலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


சல்மான் கான் நடிப்பில் உருவாகிவரும் படங்கள்...


  • Race 3: 150 கோடி ரூபாய் பட்ஜட்டில் அனில் கபூர், பாபி டியோல், ஜாக்குலின் பெர்ணான்டஸ், டெய்ஸி ஷா, சாகுயிப் சலீம் என பலரும் நடித்துள்ளனர்.

  • Kick 2: பெரும் பொருட்செலவில் அடுத்தமாதம் உருவாக இருந்த திரைப்படத்தினை ஹாஜித் நடிவாலா அறிவித்து இருந்தார்.

  • Dabangg 3: சுமார் 100 கோடி ரூபாய் பொருட்செலவில், சல்மான் கான் ஒப்பந்தமாகியுள்ள திரைப்படம்.

  • Bharat: பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படம் என அலி அப்பாஸ் ஜாப்பர் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

  • Loveratri: 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உருவாகவுள்ள திரைப்படம்.


இவற்றுக்கிடையில் பிரபல BiggBoss தொலைக்காட்சி நிகழ்ச்சியும், 'Dus Ka Dum' நிகழ்ச்சியையும் இவர் தொகுத்து வழங்க ஒப்பந்தமாகியிருந்தார். தற்போது இவர் சிறை செல்லும் நிலையில் அனைத்து திட்டங்களும் கேள்விகுறியாகியுள்ளது!