கனடா: கனேடியன் பாடகர் கிளாரி எலிஸ் பவுச்சர் (Claire Elise Boucher), தொழில் ரீதியாக கிரிம்ஸ் (Grimes) என்று அழைக்கப்படுபவர், தனது முதல் ஆன்லைன் நுண்கலை கண்காட்சியான "செல்லிங் அவுட்" (Selling out) இல் தனது ஆன்மாவை போன்ற தன் கலையை விற்பனை செய்ய உள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாடகி தனது ஆன்மாவை போன்ற கலைபடைப்பை சட்டப்பூர்வமாக விற்க திட்டமிட்டுள்ளார். இதை வாங்குபவர் தனது ஆத்மாவின் ஒரு சதவீதத்தைப் பெறுவார் என்கிறார்.


"யாரும் அதை வாங்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. எனவே நாங்கள் அதை 10 மில்லியன் டாலர் (75 கோடி) என்று விற்பனைக்கு வைத்தேன் என்று கூறினார். அதனால் அது விற்பனை ஆக வில்லை," என்று அவர் ஒரு நிறுவனத்திடம் கூறினார்.


"நாம் இன்னும் ஆழமாகப் பார்த்தால், மேலும் தத்துவ ரீதியாக இது சுவாரஸ்யமானது" என்று அவர் கூறுகிறார். ''கலை தொடர்பாக எனது வழக்கறிஞருடன் இணைய விரும்பினேன். சட்ட ஆவணங்களின் வடிவத்தில் அருமையான கலையின் யோசனை எனக்கு மிகவும் புதிராகத் தெரிகிறது.'' என்றார்


கிளேர் ஆன்மா கலை மற்ற படைப்புகளில் இருந்த வரைபடங்களை விட டிஜிட்டல் நிகழ்வின் விலையுயர்ந்தில் ஒன்றாக இருந்தது. இதில் அச்சிட்ட, புகைப்படங்கள் மற்றும் பாடகர் உருவாக்கிய கலைப்படைப்புகள் ஆகியவை இருந்தது.


நான் ஒரு கீபோர்டை தொடுவதற்கு 10, 12 ஆண்டுகளுக்கு முன்பே நான் இதை உருவாக்கினேன். என்னை மக்கள் முதலில் ஒரு காட்சி கலைஞனாகவே பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மக்கள் என்னை இசை வழியாக அறிந்திருப்பது எனக்கு எப்போதுமே விசித்திரமாக இருக்கிறது" என்று அவர் மேலும் கூறினார்.


(மொழிமாற்றம்: நடராஜன் விஜயகுமார்)