“தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” மத்திய அரசை சாடிய கமல்ஹாசன்
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு என கமல்ஹாசன் குற்றம்சாட்டி உள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 16-ம் தேதி காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பான இறுதி தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கியது. அந்த தீர்ப்பில் காவேரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றும், 6 வார காலத்திற்குள்ளாக மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டு என ஆணையிட்டது.
ஆனால் கொடுக்கப்பட்ட கெடு வரையிலும் மத்திய அரசின் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனையடுத்து உச்சநீதிமன்ற தீர்பினை அவமதித்ததாக தமிழக அரசின் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இதற்கிடையில் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.
காவிரி வாரியம்: பிரதமருக்கு வீடியோ-வை தொடர்ந்து கமல் கடிதம்!
இதனையடுத்து உச்சநீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள ’ஸ்கீம்’ என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்டு, மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதற்கு விளக்கமளித்த உச்சநீதிமன்றம் ‘ஸ்கீம்’ என்றால் காவிரி பிரச்சனையை தீர்க்கும் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று தெரிவித்தது. மேலும் வரும் மே 3-ஆம் தேதிக்குள் காவிரி விவகாரம் தொடர்பாக, வரைவு திட்டத்தை தாக்கல் செய்யவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கருப்பு கொடி!! கருப்பு சட்டையுடன் இருக்கும் கருணாநிதி புகைப்படம்!!
இந்நிலையில்ம் இன்று காவிரி விவகாரம் தொடர்பாக பதில் அளிக்க மேலும் 2 வாரம் அவகாசம் வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இந்த கோரிக்கையினை மனுவாக தாக்கல் செய்ய மத்திய அரசிற்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் மனுவாக தாக்கல் செய்யும் பட்சத்தில் வரும் மே 3-ஆம் நாள் இந்த மனு விசாரிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் 2 வாரம் அவகாசம் குறித்து மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது:- காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், மீண்டும் தாமதம் செய்கிறது மத்திய அரசு. “தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி” இந்த அநீதியைத் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள் எனக் கூறியுள்ளார்