நடிகை மேக்னா ராஜ்-க்கு சிரஞ்சீவி சார்ஜா-வுடன் திருமணம்!
![நடிகை மேக்னா ராஜ்-க்கு சிரஞ்சீவி சார்ஜா-வுடன் திருமணம்! நடிகை மேக்னா ராஜ்-க்கு சிரஞ்சீவி சார்ஜா-வுடன் திருமணம்!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2018/04/12/128806-meghana-raj.jpg?itok=Gs0uEPMB)
நடிகை மேக்னா ராஜ்-க்கு சிரஞ்சீவி சார்ஜா-வுடன் திருமணம் மே 2-ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது..!
தமிழில் சினிமாவில் காதல் சொல்ல வந்தேன், உயர்திரு 420, நந்தா நந்திதா உட்பட சில படங்களில் நாயகியாக நடித்தவர் மேக்னா ராஜ். இவர், தப்புத்தாளங்கள் சுந்தர் ராஜ் மற்றும் வைதேகி காத்திருந்தாள் பிரமிளா ஆகியோரின் மகள். தமிழை விட மலையாளம், மற்றும் கன்னட படங்களில் அதிகமாக இவர் நடித்து வருகிறார். இவர், கன்னட ஹீரோ சிரஞ்சீவி சார்ஜாவை காதலித்து வந்தார்.
இதை தொடர்ந்து, கடந்த வருடம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்கள் திருமணத் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறி இருந்தனர். இதையடுத்து தற்போது அவர்களின் திருமணத் தேதியை அறிவித்துள்ளனர். வருகின்ற மே மாதம் 2-ம் தேதி பெங்களூர் பேலஸ் மைதானத்தில் இவர்கள் திருமணம் நடக்கிறது.
இவர்களின் திருமணத்தில் திரைத்துறையினர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர். சிரஞ்சீவி சார்ஜா, நடிகர் அர்ஜூனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.