Yashika Arrest Warrant: தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகை யாஷிகா கடந்த 2021-ம் ஆண்டு இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் சென்ற போது விபத்தில் சிக்கிய விவகாரம் தொடர்பான விசாரணைக்கு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகததால் செங்கல்பட்டு நீதிமன்றம் பிடிவாரெண்ட் உத்தரவிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏன் நடிகை யாஷிகாவுக்கு பிடிவாரெண்ட் பிறப்பிக்கப்பட்டது?
அதிவேகமாக கார் ஓட்டி உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது வழக்கில், நேரில் ஆஜராகும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தும், நேரில் ஆஜராகாததால் பிடிவாரண்ட் பிறப்பித்து செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


நடிகை யாஷிகா மீது போடப்பட்ட வழக்குகள் என்ன?
அதிவேகமாக கார் ஓட்டியது, உயிர்ச்சேதம் ஏற்படுத்தியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் நடிகை யாஷிகா ஆனந்த் மீது மகாபலிபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.


மேலும் படிக்க: இவ்வளவு கவர்ச்சியா? நெட்டிசன்களை மயக்கிய யாஷிகா: வீடியோ வைரல்


எதனால் யாஷிகா மீது வழக்குகள் பதியப்பட்டது?
கடந்த 2021-ம் ஆண்டு நடிகை யாஷிகா இசிஆர் அருகே நண்பர்களுடன் காரில் அதிவேகமாக சென்ற போது கார் நிலை தடுமாறி விபத்தில் சிக்கியது. இதில் யாஷிகாவின் தோழி ஒருவர் உயிரிழந்தார். மேலும் யாஷிகா மற்றும் அவருடன் இருந்த நண்பர்கள் பலத்த காயமடைந்தனர்.


செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவு
பிடிவாரண்ட் பிறப்பித்ததோடு இல்லாமல், அடுத்த மாதம் ஏப்ரல் 25 ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. ஒருவேளை அன்றும் அவர் நேரில் ஆஜராகாவில்லை என்றால், அவரை மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவு. 


மேலும் படிக்க:  யாஷிகாவின் வேற லெவல் வொர்க் அவுட்- வீடியோ செம வைரல்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ