விஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி, தயாரிக்கும் ‘சென்னை பழனி மார்ஸ்’
விஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி, தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
விஜய் சேதுபதி சொந்தமாக கதை எழுதி, தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு வெளியாகி பெரும் பாராட்டுக்களைக் குவித்த படம் மேற்குத் தொடர்ச்சி மலை. இதை தொடர்ந்து விஜய் சேதுபதி தயாரிக்கும் படத்துக்கு ‘சென்னை பழனி மார்ஸ்’ எனப் புரியாத தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் கதையையும் விஜய் சேதுபதி எழுதியுள்ளார்.
ஆரஞ்சு மிட்டாய் படத்தினை இயக்கிய பிஜு விஸ்வநாத் தான் இந்த படத்தினை இயக்குகிறார். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 22ம் தேதி வெளியாகிறது.