நடிகை பேபி சாரா அர்ஜுனின் சொத்து மதிப்பு விவரம்: சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான பேபி சாரா அர்ஜுன், தன்னுடைய 18 வயதில் பல கோடி சொத்து மதிப்புக்கு சொந்தமாகியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேபி சாரா அர்ஜுன்:
2011 ஆம் ஆண்டு வெளியான தெய்வத்திருமகள் படத்தில் விக்ரமின் மகளாக க்யூட்டான குழந்தையாக நடித்திருந்தார் நடிகை சாரா (Sara Arjun). தெய்வத்திருமகள் திரைப்படத்தில் நடித்தற்கு பிறகு, சாரா அதே இயக்குநரின் இயக்கத்தில் வெளிவந்த “சைவம்” படத்திலும் குழந்தை கதாப்பாத்திரமாக நடித்திருந்தார். தெய்வத்திருமகள் படத்தில் மிகவும் சிரிய குழந்தையாக இருந்த இவர், இந்த படத்தில் கொஞ்சம் வளர்ந்த குழந்தையாக காண்பிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இவர், விழித்திரு, ஹலிதா சமீம் இயக்கிய சில்லுக்கருப்பட்டி போன்ற படத்தில் நடித்திருந்தார். இவர், பிரபல நடிகர் ராஜ் அர்ஜுனின் மகளாவார். இவரது தாயும் பரத நாட்டிய கலைஞர். தந்தை மூலமாக திரையுலகிற்குள் வந்த இவர், தற்போது நன்கு வளர்ந்த பருவ மங்கையாக மாறிவிட்டார். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான "பொன்னியின் செல்வன்" திரைப்படத்தின் இர்ணடு பாகங்களிலும் இளம் வயது நந்தினியாக நடித்து மீண்டும் ஒருமுறை தமிழ் ரசிகர்களின் மனங்களில் இடம் பிடித்தார். இப்படம் இரண்டு பாகங்களாக வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் ரூ.800 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது. 2005ஆம் ஆண்டு பிறந்த சாராவிற்கு தற்போது 18 வயதாகிறது.


மேலும் படிக்க | மீனாட்சி பொண்ணுங்க இன்றைய எபிசோட்! ஷக்தி வைத்த ஆப்பு.. புஷ்பா செய்த சத்தியம்


பேபி சாரா அர்ஜுன் சம்பள விவரம்-சொத்து மதிப்பு விவரம்:
இந்நிலையில், 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, 10 கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் (Baby Sara Networth and Salary Details) இந்தியாவின் பணக்கார குழந்தை நடிகை என்ற சாதனையை சாரா அர்ஜுன் பெற்றுள்ளார். இதனால் 10 ஆண்டுகளில் சாராவின் சொத்து மதிப்பு ஜெட் வேகத்தில் உயர்ந்துள்ளது.  ஸ்கூல் படிக்கும்போதே கோடிக்கணக்கில் சம்பாதித்த சாரா விரைவில் ஹீரோயினாகவும் தனது அல்டிமேட் நடிப்பு திறமையை காட்டுவார் என ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருக்கின்றது.


ஹீரோயினாகும் சாரா:
இதனிடையே பேபி சாராவா இருந்து வந்த சாரா தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாக உள்ள திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாக உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இது குறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், மணிரத்னம் பொன்னியின் செல்வன் படத்தில் சாராவை தெய்வீக அழகை காண்பித்துவிட்டார். இனி சாரா ஹீரோயினாக நடிக்கலாம். அவரை 2025 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகப்படுத்த இருக்கிறேன் என்று கூறியிருந்தார், மேலும் விரைவில் நடிகர் விஜய்யுடன் இரண்டாவது கதாநாயகியாக ஒரு படத்தில் நடிப்பார் என்ற தகவலும் பரவி வருகிறது. எனினும், இது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. எனவே தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் சாராவிற்கு ஹிந்தி திரையுலகிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


16 வயது மூத்த நடிகருக்கு ஜோடியாக பேபி சாரா:
அதுமட்டுமின்றி 18 வயது நிரம்பிய சாரா அர்ஜுன், தன்னை விட 16 வயது மூத்த நடகர் ஒருவருக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. 


மேலும் படிக்க | மாரியை காப்பாற்றிய குங்குமம்! மாரி சீரியல் அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ