#VjChitra: சித்ராவை கொன்றது கணவர் ஹேமந்த்... பரபரப்பை ஏற்படுத்திய அம்மா..
சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் தான் என்று சித்ராவின் அம்மா விஜயா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
சென்னை: சின்னத்திரை நடிகை சித்ராவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் ஹேமந்த் தான் என்று சித்ராவின் அம்மா விஜயா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். பிரேத பரிசோதனையின் முதல்கட்ட அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சித்ரா தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு உடல்கூறாய்வு பரிசோதனை தொடங்கி, தற்போது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதிச்சடங்கில் பல பிரபலங்கள் கலந்துக் கொள்வார்கள் என்றுகூறப்படுகிறது.
சித்ராவின் (Actress chitra) மரணம் தொடர்பாக கணவர் ஹேமந்த் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சம்மன்அனுப்ப காவல்துறையினர் முடிவு செய்திருக்கின்றனர். சித்ரா யாருடன் தொலைபேசியில் பேசினார் என்ற விசாரணையும் தொடர்கிறது. சித்ராவின் நட்பு வட்டத்தில் இருந்தவர்கள், தொடர்பில் இருந்தவர்களும் போலீசாரின் விசாரணை வளையத்திற்குள் வருகின்றனர்.
சென்னை நசரேத் பேட்டையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சித்ரா அங்கு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த செய்தி வெளியாகி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் இன்று சித்ராவின் வீட்டிற்கு பிரபலங்கள் பலரும் வந்து துக்கம் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். அப்போது குடும்பத்தினர் தடுத்த நிலையில், சித்ராவின் அம்மா விஜயா, தனது மருமகன் ஹேமந்த் தான், மகளை அடித்துக் கொன்றிருப்பதாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்ரா மிகவும் தைரியமானவர், எப்போதும் நான் தான் அவளுடன் ஷீட்டிங் அனைத்திற்கும் செல்வேன், ஆனால் திருமணம் ஆகிவிட்ட்தால், கணவர் செல்லும்போது நான் செல்லத் தேவையில்லை என்பதால் கூடச் செல்லவில்லை என்று அழுதுகொண்டே சித்ராவின் தாயார் விஜயா சொல்கிறார்.
"என் மகளின் (Actress chitra) கொலைக்கு காரணம் யாராக இருந்தாலும் சரி, அவர்களை தண்டிக்க வேண்டும் என்று சித்ராவின் தாய் குமுறுகிறார். என் மகள் மிகவும் துணிச்சலானவர், எதற்கும் பயப்படமாட்டார், இதுபோன்ற சூழ்நிலையில் இருந்த பலருக்கும் தைரியம் சொல்லி, வாழ்வில் அனைத்தும் மாறிவிடும், என்று ஊக்கம் சொல்பவர். எனவே, அவள் தற்கொலை செய்துக் கொள்ள வாய்ப்பேயில்லை. ஹேமந்த் அடித்து கொன்றிருக்க வேண்டும்" என்று சித்ராவின் தாயார் விஜயா ஆவேசமாக பேட்டியளித்தார்.
ALSO READ | #VjChitra: முல்லையாக மலர்ந்து ஹோட்டலில் வாடிய மலராய் உதிர்ந்த சித்ரா - Pic's
"பதிவுத் திருமணம் நடைபெற்ற பிறகு, மாமியார் வீட்டில் மூன்று நாட்களும், எங்கள் வீட்டில் மூன்று நாட்களும் இருக்கலாம் என்று முடிவெடுத்து, அதன்படி தான் இருந்துவந்தார்கள். ஆனால், அவர்கள் மாமியார் குடும்பத்தில் என்ன பிரச்சனை இருந்த்து என்று தெரியவில்லை. கடையாக இரவு 8 மணிக்கு மகளுடன் கடைசியாக பேசினேன். காலை 5-5.30 மணிக்கு சித்ராவின் மாமனார் போன் செய்து, சித்ரா அனைவரையும் ஏமாற்றிவிட்டார் என்று மரணச் செய்தியை சொன்னார்" என்று சித்ராவின் (Actress chitra) அம்மா தெரிவித்திருக்கிறார்.
ஹேமந்த் (Hemanth kumar) என்ற தொழிலதிபருடன் சித்ராவுக்கு பதிவுத் திருமணம் நடைபெற்றிருந்தது. இருவரும் ஹோட்டலில் தங்கியிருந்தனர்.பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் முல்லை கதாப்பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் சித்ரா. திருவான்மியூர் பகுதியில் வரும் சித்ரா. சென்னை புறநகர் பகுதியில் படபிடிப்பு நடந்துக் கொண்டிருந்ததால், சென்னை, நசரத்பேட்டையிலுள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார் சித்ரா. அவருடன், கணவர் ஹேமந்தும் தங்கியிருந்தார்.
ALSO READ | #VjChitra: பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லையின் தற்கொலைக்கு காரணம் என்ன?
ஹோட்டலுக்கு வந்தவுடன் தான் குளிக்கப்போவதாக சொல்லிவிட்டு, ஹேமந்தை வெளியே நிற்கவைத்து விட்டு அறையின் கதவை மூடிக் கொண்டார். ஹேம்நாத் அறையின் வெளியே நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருந்தார். பிறகு கதவை தட்டியபோது பதில் ஏதும் வரவில்லை.
எனவே ஹேமந்த் மாற்று சாவி கொண்டு திறந்து உள்ளே போய் உள்ளார். அங்கு சித்ரா புடவையில் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்ததைப் பார்த்தார். உடனே அவர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். ஹோட்டலுக்கு விரைந்த போலீசார் (police), சித்ராவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சித்ரா கலகலப்பானவர், அனைவருடனும் சுமூகமாகவும், நட்புடனும் பழகுபவர். தைரியமானவர் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கொரோனா காலகட்டத்தில் அனைவரும் லாக்டவுனில் வீட்டில் இருந்தபோது, சமூக ஊடகங்கள் டப்-மேஷ் மூலமாக அவர் மிகவும் சுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார். சித்ராவின் மரணம் சின்னத்திரை முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது நேர்மறையான சிந்தனைகள் தெரிகிறது.
சித்ரா தற்கொலை தொடர்பாக ஹோட்டல் நிர்வாகிகள், ஹேமந்த் என பலரிடம் காவல்துறையினர் போலீசார்(police) விசாரணை நடத்த உள்ளனர். சித்ராவின், தொலைபேசி உரையாடல்கள், மெசேஜ்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்யப்படும். தொழில்முறையில் சித்ராவுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்ததா, அவருக்கு யாராவது மிகவும் அழுத்தம் கொடுத்தார்களா என்பது போலீசார் விசாரணையில் தெரியவரும்.
திருமணமான இரண்டு மாதத்தில் தற்கொலை செய்து கொண்டதால், மரணத்திற்கு காரணம் குடும்ப வன்முறையா என்ற கோணத்திலும் விசாரிக்கப்படுகிறது. பாலிவுட்டில் நடிகர் சுஷாந்த் ராஜ்புத்தின் மரணம் இந்த ஆண்டில் மிகப்பெரிய அதிர்ச்சியையும் சர்ச்சைகளையும் எழுப்பியது. அதேபோல், சின்னத்திரை நடிகை சித்ராவின் மரண வழக்கும் பல்வேறு திருப்பங்களை காணுமோ என்று தோன்றுகிறது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR