கோப்ரா படத்தின் First Look வெறித்தனமான சம்பவம்.. காத்திருக்கும் ரசிகர்கள்!!
`கோப்ரா` படத்தின் முதல்பார்வை போஸ்டரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிட்டார். இது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை: டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் படங்களை இயக்கிய இயக்குனர் அஜய்ஞானமுத்து இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் தான் "கோப்ரா". தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. நடிகர் விக்ரமின் 58 வது படமாக உருவாகி வருகிறது. "விக்ரம் 58" படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.
இந்நிலையில், "கோப்ரா" படத்தின் முதல்பார்வை போஸ்டரை இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிப்ரவரி 28 ஆம் தேதி வெளியிட்டார். இது பெரும் வரவேற்பை பெற்று வருகிறது குறிப்பிடத்தக்கது. ஏழு கெட்டப்களில் நடிகர் விக்ரம் இருப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி, கிரிக்கெட் வீரர் இர்பான் பதான், இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் உள்பட பலர் நடித்து வருகின்றனர். படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.
இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்தது "பொன்னியின் செல்வன்" படப்பிடிப்பில் நடிகர் விக்ரம் கலந்துக்கொள்ள உள்ளார் என்பது உங்களுக்கு நினைவுப்படுத்துகிறோம்.