Comedy King Goundamani Net Worth Details : தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரான கவுண்டமணியின் சொத்து மதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. இதன் முழு விவரத்தை இந்த பதிவில் விரிவாகத் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி :
1960 முதல் 2000 வரையில், பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும் சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்தவர் நம்ம கவுண்டமணி. தற்போது வயது முதிர்வு காரணமாக படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். ஆனாலும் இவர் நடித்த நகைச்சுவை காட்சிகளை பார்த்து இன்றைய இளம் தலை முறையினரும் வயிறு குலுங்க சிரிப்பதை காண முடியும். 


ஆரம்ப கால சினிமா வாழ்க்கை :
கவுண்டமணியின் நகைச்சுவையில் என்றாலே அதில் எப்போதும் முற்போக்கு சிந்தனை வெளிப்படையாக இருக்கும். ரசிகர்கள் கவனத்தில் கொள்ளாத வேடங்கள் நடிக்கவேண்டும் என்கிற ஆசையில், கொங்கு தேசத்தில் இருந்து சென்னைக்கு வந்தவர் இவர். ஆரம்பத்தில் நாடகங்களில் சின்னச்சின்ன வேடங்களில் நடித்த பின்னே சினிமாவில் கால் பதித்தார். இவரது இயற்பெயர் சுப்ரமணிய கருப்பையா. சினிமா வாழ்வின் தொடக்கத்தில் ரசிகர்கள் கவனத்தில் கொள்ளாத வேடங்களும், அவ்வப்போது தலைகாட்டிச் செல்லும் கதாபாத்திரங்களும்தான் கிடைத்தன. ஆனாலும் சோர்ந்துபோகாமல், துவண்டுவிடாமல், தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தார்.


கம்யூனிசம் சிந்தனை :
கவுண்டமணியின் நகைச்சுவையில் என்றாலே அதில் எப்போதும் முற்போக்கு சிந்தனை வெளிப்படையாக இருக்கும். முக்கியமாக பல நேரங்களில் கம்யூனிசம் பேசுபவர் இவர். திரையில் விரியும் காட்சியின் அழுத்தத்தால், ரசிகர்களை மிகச்சுலபமாக அழவைத்துவிடமுடியும். ஆனால், சிரிக்கவைப்பது அத்தனை சுலபமில்லை. சிரிக்க வைப்பது, வயிறு வலிக்க சிரிக்க வைப்பது, விழுந்து விழுந்து சிரிக்கவைப்பது, மனம் விட்டு சிரிக்கவைப்பது, வாய்விட்டுச் சிரிக்கவைப்பது என்பதெல்லாம் சாதாரண விஷயமில்லை. இதை அசாதாரணமாகச் செய்பவர்களைத்தான் மிகச்சிறந்த காமெடி நடிகர்கள் என்று கொண்டாடி கொண்டிருக்கிறோம். அந்த காமெடியில் எவரின் சாயலுமில்லாமல், சாதனைப் படைத்தவர்தான் கவுண்டமணி. 


மேலும் படிக்க | ‘Enjoy Enjaami..’ மூலம் கிடைத்த லாபம் எவ்வளவு - சந்தோஷ் நாராயணன் பகிரும் சீக்ரெட்!


பழம்பெரும் நடிகர்களுடன் கவுண்டமனி :
கவுண்டமணி, 1964 முதல் 1979 வரையிலான காலகட்டத்தில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாகப் மறைந்த முதலமைச்சரும் முன்னாள் நடிகருமான எம். ஜி.ஆர் நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் உழைக்கும் கரங்கள் படத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமின்றி நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் 'ராமன் எத்தனை ராமனடி' படத்தில் நடித்துள்ளார். மேலும் கருப்பு வெள்ளை காலத்தின் நகைச்சுவையில் சிறந்து விளங்கிய நடிகர் நாகேஷ் உடனும் இணைந்து நடித்துள்ளார்.


கவுண்டமணி-பெயர் வந்தது எப்படி? 
16 வயதிலிலே படத்தில் இடம் பெற்றிருந்த டைமிங் ரைமிங் வசனம்தான், அநேகமாக அவரது முதல் ’பஞ்ச்’சாக இருக்கவேண்டும். கவுண்டமணியின் ராஜாங்கத்துக்கான அஸ்திவாரம் அங்கேதான் போடப்பட்டது. நாடகங்களிலும் இவரது டயலாக் டெலிவரிக்கு, ஏகப்பட்ட பாராட்டுகள். அதனால் மணியை, ‘கவுண்ட்டர்’ மணி என்று அழைத்தார்கள். இதைப்பார்த்த 16 வயதினிலே படக்குழு ’ஓ... இவர் பெயர் கவுண்டமணி போல’ என்று நினைத்து டைட்டில் கார்டில் கவுண்டமணி என்றே பெயர் போட்டு விட்டனர். அப்போது, பத்தோடு பதினொன்றாக வந்த கவுண்டமணியின் பெயர், அடுத்தடுத்த படங்களில் வரும்போதே, மிகப்பெரிய கரவொலி கிடைத்ததுதான் கவுண்டமணியின் ஆரம்பகால வெற்றி.


சினிமா உலகிலேயே ஒரு ரவுண்டு வந்த காமெடியன் :
சத்யராஜுடன் கணக்கிலடங்கா படங்களில் நடித்த கவுண்டமனி இந்தப் பக்கம் விஜயகாந்த் அந்தப் பக்கம் பிரபு, நடுவே ஜெயராமுடன் கூட்டணி, திடீரென்று அஜித்துடன், பிறகு விஜய்யுடன்... ஆனால் எப்போதும் செந்திலுடன் என சினிமா உலகிலேயே ஒரு ரவுண்டு வந்து நம்மையும் ரவுண்டுகட்டி சிரிக்க வைத்ததில் வில்லாதிவில்லன் ஆகி விட்டார் கவுண்டமணி. 


காமெடி கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு :
இந்நிலையில் தற்போது 84 வயதிலும், கதையின் நாயகனாக நடித்து அசத்தி வரும், காமெடி கிங் கவுண்டமணியின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவரின் சொத்து மதிப்பு 50 முதல் 70 கோடி வரை இருக்கலாம் என கூறப்படுகிறது. அதேபோல் சென்னையில் பல இடங்களில் வீடுகள் உள்ளது. அதுமட்டுமின்றி இவருக்கு சொந்த ஊரிலும் ஏகப்பட்ட இடங்கள், வீடுகள் உள்ளது, மேலும் இவர் பல கார்களும் வைத்துள்ளார். எனினும் இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் இல்லை.


மேலும் படிக்க | ‘குணா’ பட நாயகி ரோஷிணிக்கு என்ன ஆச்சு? முழு தகவல் இதோ..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ