சென்னை: கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் தமிழக அரசியல் குழப்பங்களை உன்னிப்பாக கவனித்து அவ்வப்போது தனது கருத்துக்களை சமூக வலைத்தளங்கள் மூலம் உலகநாயகன் கமல்ஹாசன் பதிவிட்டு வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கு எதிராக மக்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் நடிகர் கமல்ஹாசன் நடந்து கொள்வதாக இந்திய தேசிய லீக் கட்சி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளது. 


நடிகர் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக மக்களை தூண்டும் விதத்தில் கருத்து வெளியிட்டு இருக்கிறார். இது மக்களை வன்முறைக்கு அழைத்து செல்லும். விரும்பிய அரசு அமைய வில்லை என்பதனால் வன்முறைக்கு மக்களை தூண்டுவது சட்டப்படி குற்றம். கமல்ஹாசனின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதனை பயன்படுத்தி தொகுதி மக்கள் என்ற போர்வையில் சமூக விரோதிகள் எம்.எல்.ஏக்கள் மீது தாக்குதல் நடத்தினால் அதற்கு கமல்ஹாசனே பொறுப்பு ஏற்கவேண்டும். வன்முறையை தூண்டும் வகையில் பேசியிருக்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும். 


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.