அரசியலுக்கு வரும் சூழ்நிலையில் தனி கட்சி மட்டுமே - நடிகர் கமல்ஹாசன்
நான் இருக்கும் இடத்தில் ஊழல் இருக்காது. ஊழல் இருக்கும் இடத்தில் நான் எப்பொழுதும் இருக்க மாட்டேன் என நடிகர் கமல்ஹாசன் தனது பேட்டியில் கூறியுள்ளார். மேலும் நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால், தனி கட்சி மட்டுமே தொடங்குவேன். எந்த கட்சியிலும் இணைய மாட்டேன். அப்படி ஒரு எண்ணம் என்னிடம் இல்லை.
தமிழ்நாட்டில் இருந்து மாற்றம் கொண்டு வர விருப்பபடுகிறேன். அதற்கு சிறிது காலம் ஆகலாம். சரியான நேரம் அமையும் பட்சத்தில் மாற்றம் தொடங்கப்படும் என தனது பேட்டியில் நடிகர் கலம்ஹாசன் கூறினார்.