குக் வித் கோமாளி என்பது ஒரு தனியார் தொலைக்காட்சியில் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை ரக்ஷன் தொகுத்து வழங்க சமையல் கலை நிபுணர்களான செப் தாமு மற்றும் செப் வெங்கடேஷன் பட் ஆகியோர்கள் தலைவராக உள்ளார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த சமையல் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக பிக்பாஸ் (Bigg Boss) நிகழ்ச்சிக்கு அடுத்தபடியாக, அதிக பார்வையாளர்களை கவர்ந்துள்ளது 'குக் வித் கோமாளி' (Cook with Comaliநிகழ்ச்சி. முதல் சீசன் சுமாரான வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசன் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் ஹிட்டாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைத்து பிரபலங்களுக்கும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவும் துவங்கிவிட்டது. 


ALSO READ | குக் வித் கோமாளி சிவாங்கியின் இந்த போட்டோ இணையத்தில் வைரல்!


இந்நிலையில் தற்போது தமிழில் சூப்பர் ஹிட்டான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தற்போது கன்னடத்தில் ஒளிபரப்ப ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. ’குக் வித் கிறுக்கு’ என்ற டைட்டிலில் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் குக்’குகள் மற்றும் கோமாளிகள் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. 


அதேபோல் மலையாளம், தெலுங்கு, மற்றும் இந்தியிலும் இந்த நிகழ்ச்சி விரைவில் ஆரம்பிக்கப்பட உள்ளது. இதற்கான உரிதியான செய்திகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR