திரைப்படங்களை பார்க்க எந்தளவு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ அதே அளவு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.  தற்போது பல சேனல்கலும், பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை போட்டிபோட்டுக்கொண்டு ஒளிபரப்புகின்றன.  அதிலும் குறிப்பாக 'குக் வித் கோமாளி' என்கிற சமையல் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.  ரக்சன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.  இந்த நிகழ்ச்சியின் சீசன்-1 ஆனது 16 நவம்பர் 2019 அன்று தொடங்கப்பட்டது.  இதில் சமையல் போட்டியாளர்களாக ரேகா, உமா ரியாஸ்கான், வனிதா விஜயகுமார், பிரியங்கா ரோபோ சங்கர், ரம்யா பாண்டியன், மோகன் வைத்தியா, தாடி பாலாஜி, கு. ஞானசம்பந்தன்  ஆகியோர் கலந்து கொண்டனர்.  மேலும் இதில் கோமாளிகளாக சிவாங்கி, புகழ், பிஜிலி ரமேஷ், மணிமேகலை, டைகர் தங்கதுரை, பாலா, சாய் சக்தி, பப்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.  இதில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த நகைச்சுவை கலந்த சமையல் நிகழ்ச்சி நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இதன் இரண்டாம் பாகம்  14 நவம்பர் 2020 அன்று தொடங்கப்பட்டது.  முதல் சீசனை விட இரண்டாம் சீசன் நன்கு ரீச் ஆனது.  இதில் அஸ்வின், பவித்ரா, கனி, தீபா, மதுரை முத்து, பாபா பாஸ்கர், தர்ஷா குப்தா, ஷகீலா ஆகியோர் சமையல் போட்டியாளர்களாகவும்,  சிவாங்கி, புகழ், சுனிதா, மணிமேகலை, டைகர் தங்கதுரை, சரத், பாலா ஆகியோர் கோமாளிகளாகவும் பங்கேற்றனர்.  இந்த சீசனில் கனி வெற்றி பெற்றார்.



இந்த நிகழ்ச்சிக்கு பலருக்கு stress burster ஆக இருந்தது.  இந்த நிகழ்ச்சி நிறைவடைந்தது தொடர்ந்து அடுத்த சீசன் எப்போது வரும் என்று பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.  இந்நிலையில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்  'குக் வித் கோமாளி-3' தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.  இதில் போட்டியாளர்களாக விஜே அர்ச்சனா, சுரேஷ் ஆகியோர் கலந்து கொள்ள போவதாக கூறப்படுகிறது.  மேலும் பலரும் எதிர்பார்த்த சிவாங்கி, புகழ், பாலா இதில் கலந்துகொள்ள போவதில்லை என்றும் தகவல்கள் வெளியானது, இருப்பினும் இவை உறுதிப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ | இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இவர்தானா அவுட்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR