கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய கிரிக்கெட் வீரரும், சிஎஸ்கே அணியின் வீரருமான ஹர்பஜன் சிங், தனது டிவிட்டர் பக்கத்தில் அவ்வப்போது தமிழ் டிவீட்களைப் பதிவு செய்வார். இவரது தமிழ் பதிவுகளுக்கு ரசிகர்கள் ஏராளம்.


இந்நிலையில் நடிகர் சந்தானம் நடிக்கும் டிக்கிலோனா படத்தில் நடிகராகவும் அறிமுகமாகியுள்ளார். இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கும் இந்த படத்தில் நடிகர் சந்தானம் மூன்று கதாபாத்திரங்களில் நடிக்கிறார். இந்தப் படத்தை அடுத்து கன்சல்டன்ஸி சர்வீசஸ் என்ற வெப் சீரிஸில் திருவள்ளுவர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஹர்பஜன் சிங்.


இந்நிலையில் ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஃபிரெண்ட்ஷிப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கி தயாரிக்கின்றனர். 


இதுகுறித்து டிவிட்  செய்திருக்கும் ஹர்பஜன் சிங், நேற்று கீச்சு,சினிமா கதாபாத்திரம், இணைய தொடர். இன்று ஃபிரெண்ட்ஷிப் படத்தின் நாயகன். தமிழ் மக்களுக்கு நன்றி. திருக்குறள் டூ திரைப்பயணம் எல்லாம் சாத்தியப்படுத்தியது என் தலைவர் தல - தளபதி சின்னாளப்பட்டி சரவணன். அசத்துவோம்” என்று பதிவிட்டுள்ளார்.