ரஜினியின் தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியீடு!
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது!
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படத்தின் முதல் பாடல் ‘சும்மா கிழி’ வெளியிடப்பட்டது!
‘சர்கார்’ படத்தை அடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் ‘தர்பார்’ படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் ரஜினிகாந்த், ஆதித்யா அருணாசலம் என்ற கதாப்பாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்திருக்கும் நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மோஷன் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு தற்போது ‘சும்மாகிழி’ என்ற முதல் பாடலை வெளியிட்டுள்ளது. தமிழ் இந்தப் பாடலை ஆளப்போறான் தமிழன் பாடல் மூலம் பிரபலமடைந்த பாடலாசிரியர் விவேக் எழுதியுள்ளார். அனிருத் இசையில் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலை பாடியுள்ளார்.
டிசம்பர் 7ஆம் தேதி தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ள நிலையில் இன்று முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘ நான் தான் டா இனிமேலு, வந்து நின்னா தர்பாரு, உன்னோட கேங்கு, நான் தான் டா லீடு... நெருப்புப் பேரோட நீ குடுத்த ஸ்டாரோட இன்னைக்கும் ராஜா நான் கேட்டுப்பாரு..... என பாடல் வரி வருகிறது.