புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு 'கபாலி' படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருக்கிறது படக்குழு.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கபாலி'. கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், வசூல் ரீதியில் தயாரிப்பாளருக்கு நல்ல லாபம் அளித்த படமாக இருந்தது. 


கபாலியின் டீசர், டிரெய்லர், பாடல்கள் என்று இணையத்தில் படக்குழுவினரால் வெளியிடப்பட்ட ஒவ்வொரு வீடியோவுமே அட்டகாசமான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது.   


இந்நிலையில் கபாலியில் நீக்கப்பட்ட காட்சிகளை இன்று ரசிகர்களுக்காக ரீலீஸ் செய்துள்ளனர் படக்குழுவினர். இதனை நேற்றே ட்விட்டரில் அறிவித்திருந்தார் படத்தின் தயாரிப்பாளரான கலைப்புலி எஸ்.தாணு.