கீர்த்தி சுரேஷ்-க்கு போட்டியாக களமிறங்கிய அவரது பாட்டி!
நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் `தா தா 87`. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்களின் பாட்டி கதாநாயகியாக களமிறங்கி கலக்கியுள்ளார்!
நடிகர் சாருஹாசன் நடிப்பில் விரைவில் வெளிவர காத்திருக்கும் திரைப்படம் "தா தா 87". இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் அவர்களின் பாட்டி கதாநாயகியாக களமிறங்கி கலக்கியுள்ளார்!
இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கத்தில், சாருஹாசன் மற்றும் ஜனகராஜ் இணைந்து நடிக்கும் திரைப்படம் "தா தா 87". நடிகர் கமலஹாசன் சகோதரர் சாருஹாசன் முதன்மை கதாப்பாத்திரம் ஏற்க அவருடன் ஜனகராஜ் இப்படத்தில் களமிரங்குகிறார்.
முன்னதாக நடிகர் ரஜினி-யின் காலா திரைப்பட டீஸர் வெளியான தருவாயில், தா தா 87 படத்தின் டீஸரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். பெரும் வரவேற்ப்பினை பெற்ற இந்த டீஸரினை காலா பட டீஸருடன் ரசிகர்கள் ஒப்பிட்டு இணையத்தில் பகிர்ந்து வந்தனர். காரணம் இரண்டு படங்களும் Gangster கதையினை மையமாக கொண்டுள்ளது. இதனால் இரண்டு படங்களையும் ஒப்பிட்டு இணையவாசிகள் மீம்ஸ்-களை பகிர்ந்து வந்தனர்
சமீபத்தில் இப்படத்தில் இடம்பெறும் ஆறு அடி ஆண்டவன் என்னும் பாடலின் ப்ரோமோவினை நடிகர் விஜய் சேதுபதி வெளியட, இந்த வீடியோ இணையத்தில் சக்கைப் போடு போட்டது. இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகர் சாருஹாசன் ஜோடியாக நடிக்கும் சரோஜா அவர்களின் புகைப்படத்தினை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இவர் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்களின் பாட்டி மற்றும் அவரது அம்மா மேனகாவின் தாயார் என்பது குறிப்பிடத்தக்கது!