தனுஷ் டி50 படத்தின் முக்கிய அப்டேட் இதோ: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள நடிகர் தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி வருகிறார். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் டிசம்பர் 15 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டி51 அப்டேட்: 
இதன் பிறகு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்து உள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகிறது. தலைப்பிடப்படாத இப்படம் ‘டி51’ என அழைக்கப்படுகிறது. இந்த ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்கயுள்ளது. அதுமட்டுமின்றி இந்தப் படத்தில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளார்.


மீண்டும் இயக்குனர் அருண் மாதேஷ் தனுஷ்:
இதற்கிடையில் சொந்த தயாரிப்பு நிறுவனமான wunder bar தயாரிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் மீண்டும் ஒருமுறை நடிக்க உள்ளார். இது தொடர்பான கூடுதல் விவரம் வரும் நாட்களில் வெளியாகும்.


மேலும் படிக்க | குஷி படத்தில் அதிக சம்பளம் வாங்கியது யார்? விஜய் தேவரகொண்டாவா? சமந்தாவா?


டி 50 அப்டேட்:
நடிகர் தனுஷ், வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். இந்நிலையில் தற்போது தனுஷ், தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இருப்பினும், இந்த படத்திற்கு இப்போதே ஹைப் கூடிவிட்டது. இதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும் இதில் நடிகை நித்யா மேனன் நடிக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. மேலும் என்னை அறிந்தால் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்த அனிகா சுரேந்திரன் சமீபத்தில் இந்தப் படத்தில் இணைந்தார். 


அதுமட்டுமின்றி தனது 50 ஆவது படத்திற்காக பிரபல இசையமைப்பாளரான தேவாவை தனது படத்தில் வில்லனாக நடிக்க தனுஷ் கேட்டுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகி வைரலானது. ஆனால் இந்த படத்தில் நடிக்க இசையமைப்பாளர் தேவா மறுத்துள்ளார்.



இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தனுஷ் நடித்த மாரி 2 படதத்தில் வில்லனாக நடித்த நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் முக்கிய காதபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் ஒரு பெரிய செட்டில் பிரமாண்ட நடிகர்களுடன் இரவும் பகலும் படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் நடந்து வருகிறது. இந்த பெரிய பட்ஜெட் கேங்ஸ்டர் படத்தை இயக்குனரும் நடிகருமான தனுஷ் சிறப்பாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.


மீண்டும் மாரி செல்வராஜ்ஜுடன் இணையும் தனுஷ்:
நடிகர் தனுஷ், வரிசையாக பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். அதன்படி தனுஷ், மாரி செல்வராஜ் இயக்கத்தில் 2021ஆம் ஆண்டு வெளியான ‘கர்ணன்’ படத்தில் நடத்திருந்தார். இதையடுத்து, அவருடன் இன்னொரு படத்திலும் கைக்கோர்க்கிறார். இந்த தகவலை மாரி செல்வராஜ், தனுஷ் இருவருமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | 7ஜி ரெயின்போ காலனி பார்ட் 2வா? வாவ்.. செம அப்டேட்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ