இனி வேற ரகம்! தனுஷ் நடிக்கும் அடுத்த 7 படங்களின் அப்டேட் இதோ!

Actor Dhanush Movies: தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 2023 தீபாவளி தினத்தில் வெளியிட படக்குழு முடிவு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக உள்ள தனுஷ் தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். இதன் பிறகு இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார் தனுஷ். தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இந்த படத்தின் பூஜை கடந்த ஆண்டு நவம்பர் 28 அன்று ஹைதராபாத்தில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்திற்காக முன்னணி ஹீரோயின்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்பக் குழுவை தேர்வு செய்ய தயாரிப்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
மேலும் படிக்க | விஜய்யின் லியோ படத்தில் தனுஷ்? வெளியானது உண்மை!
இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சமீபத்தில் தனுஷ் நடித்த ‘திருச்சிற்றம்பலம்’ படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரித்தது. இப்படத்தில் தனுஷுடன் விஷ்ணு விஷால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் எஸ்.ஜே. சூர்யாவிடம் ஒரு முக்கியமான பாத்திரத்திற்காக தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. தனுஷ், எஸ்.ஜே.சூர்யா மற்றும் விஷ்ணு விஷால் என மூன்று சகோதரர்களை மையமாக வைத்து கேங்ஸ்டர் நாடகமாக இப்படம் உருவாக உள்ளது.
அஜித்தை வைத்து துணிவு படத்தை இயக்கிய இயக்குனர் எச் வினோத் சமீபத்தில் தனுஷுடன் இணைவதை உறுதி செய்துள்ளார். சமீபத்தில் ஒரு ஆன்லைன் மீடியாவுடனான உரையாடலில், எச் வினோத் தனுஷிடம் ஒரு கதை கூறியுள்ளதாக தெரிவித்தார். மேலும் தனுஷ்-எச் வினோத் படத்தை லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிக்க உள்ளது. இந்த செய்திகளுக்கு மத்தியில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணையும் புதிய படத்தை பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியது. மேலும், இந்த படத்தின் மூலம் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு பட தயாரிப்பிற்கு திரும்ப உள்ளார். மாரி செல்வராஜ் தனுஷை வைத்து கர்ணன் படத்தின் மூலம் ஹிட் கொடுத்துள்ளார்.
இது தவிர அடுத்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாக பணிகளில் பிசியாக இருக்கும் வெற்றிமாறன், வாடிவாசல் படத்திற்கு பிறகு மீண்டும் தனுஷை வைத்து இயக்க உள்ளார். ஏற்கனவே, தனுஷ் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், வடசென்னை, ஆடுகளம், அசுரன் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இலான் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
மேலும் படிக்க | விடுதலை பார்ட் 2-க்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்! வெளியாவதில் சந்தேகம்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ