Dhanush Son Yatra To Make His Debut Through Raayan Movie : நடிகர் தனுஷ் இயக்கியிருக்கும் ராயன் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமாகிறார் யாத்ரா என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை இங்கே தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ராயன் திரைப்படம் :
திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர், தனுஷ். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக கோலிவுட் சினிமாவின் திறமை மிகு கதாநாயகர்களுள் ஒருவராக உள்ளார். தற்போது இவர், தனது கைவசம் பல படங்களை வைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்பு அவரது 50வது படத்திற்கு ‘ராயன்’ (Dhanush Raayan Movie) என பெயர் வைத்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை தனுஷ் இயக்கி அவரே நடிக்கிறார். மேலும் இந்த தனுஷூடன் இணைந்து இந்த திரைப்படத்தில் எஸ்ஜே சூர்யா, செல்வ ராகவன், சந்தீப் கிஷன், காளிதாஸ், பிரகாஷ்ராஜ், உஷாரா விஜயன் அபர்ணா முரளி வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். கேங்ஸ்டர் மற்றும் குடும்ப செண்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படத்தின் ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்ரல் மாதத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மேலும் படிக்க | Dulquer Salmaan: கமலின் ‘தக் லைஃப்’ படத்தில் இருந்து விலகிய துல்கர் சல்மான்? காரணம் என்ன?


ராயன் திரைப்படத்தில் மூத்த மகன் யாத்ரா :
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ராயன் திரைப்படத்தில் தனுஷின் மூத்த மகன் யாத்ராவும் (Dhanush Son Yatra) முக்கியமான பங்களிப்பை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஆனால் நடிகராக அல்ல மாறாக ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறாராம். தொடர்ந்து அவர் அடுத்தடுத்து முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுடன் இணைவார் என்று எதிர்பார்க்கலாம். 


இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் தனுஷ் :
இதனிடையே இசைஞானி இளையராஜா வாழ்க்கை வரலாறு படமாக உருவாக உள்ளதாகவும், அதில் நடிகர் தனுஷ் ஹீரோவாக நடிக்க இருப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. 


நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் :
இதினிடையே தற்போது நடிகர் தனுஷ், “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (Nilavukku Enmel Ennadi Kobam) என்ற படத்தை இளம் நடிகர்களை வைத்து இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இதில் பிரியா வாரியர், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தில் இன்னும் 30 சதவிகித சூட்டிங் மீதமுள்ளது. இதனிடையே தான் கமிட் செய்தபடி சேகர் கம்முலா இயக்கத்தில் அடுத்ததாக டி 51 படத்தில் (D51) தற்போது நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் ஒரு படத்திலும் தனுஷ் நடிக்க இருக்கிறார். அடுத்து ‘ராஞ்சனா’ பட இயக்குநர் ஆனந்த் எல்.ராஜ் இயக்கும் ‘தேரி இஷ்க மெயின்’ என்ற படத்திலும் தனுஷ் நடிக்கிறார். அடுத்ததாக ஹெச் வினோத் இயக்கத்தில் இணைய உள்ளார் தனுஷ். தொடர்ந்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மீதமுள்ள சூட்டிங்கை அவர் நிறைவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | Manjummel Boys: 100 கோடி வசூலை தாண்டிய மஞ்சுமெல் பாய்ஸ்! தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடியா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ