தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்த அருண்ராஜா காமராஜ்
தனுஷ் நடித்து வரும் ’கேப்டன் மில்லர்’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் புதிதாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழும் தனுஷ் பாலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என பல மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தன்னுடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்கள் மூலம் ரசிகர்களை குஷி படுத்தி உள்ளார். சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான வாத்தி படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அருண் மாதேஸ்வர் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர். கேப்டன் மில்லர் படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தின் தாங்கல் மண்டலத்தில் நடைபெற்று வருகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. தற்போது இப்படத்தின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் தென்காசி அருகே உள்ள வனப்பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் 'கேப்டன் மில்லர்' படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பினை எகிற செய்துள்ளது. அதன்படி அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் புதிதாக தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இணைந்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் ஒரு பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார் என்றும் ’அரக்க சம்பவம்’ என்ற இந்த பாடல் விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | தமிழ் சினிமாவின் 'நீங்காத பிறை' - பாலு மகேந்திராவின் பிறந்தநாள் இன்று
இதனிடையே தற்போது கேப்டன் மில்லர் படம் பீரியட் பிலிமாக 1930 - 40 காலக்கட்டங்களில் நடந்த சம்பவமானது. இந்தப்படத்திற்காக நீண்ட தலைமுடி, தாடி என வேறலெவல் லுக்கில் இருக்கிறார் தனுஷ். மேலும் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஜூன் மாதத்திலும், டீசர் ஜூலை மாதத்திலும் வெளியாகயுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் சேகர் கம்முலாவுடன் இணைய உள்ளார். இதனை தொடர்ந்து தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடிக்க உள்ளார். இதற்கு தற்காலிகமாக 'D 50' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த செய்திகளுக்கு மத்தியில் தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் மீண்டும் இணையும் புதிய படத்தை பற்றிய அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாக படுத்தியது. இது தவிர அடுத்த ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் மீண்டும் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதுமட்டும் இல்லாமல், பியார் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இலான் இயக்கத்திலும் தனுஷ் ஒரு படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பிச்சைக்காரன் 3 வந்தால் என்னவாகும்? கலக்கத்தில் மக்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ