இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம் எஸ் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பில் உருவாகி வரும் முதல் தமிழ் திரைப்படமான 'எல்.ஜி.எம்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த 2இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது. இதனை எம். எஸ் தோனி தன்னுடைய அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இசையமைப்பாளரும், இயக்குநருமான ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகி வரும் திரைப்படம் 'எல். ஜி. எம்'. இதில் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு, மிர்ச்சி விஜய் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தோனி எண்டர்டெய்ன்மெண்ட்டின் முதல் தயாரிப்பான 'எல். ஜி. எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி, ''இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் எம். எஸ். தோனியுடனும், 'எல். ஜி. எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்குடனும் இருந்த தருணங்கள்.. என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத தருணங்கள்'' என குறிப்பிட்டிருக்கிறார்.  


மேலும் படிக்க |  தமிழ் புத்தாண்டிற்கு வெளியாகும் 8 புதிய படங்கள்! முழு விவரம்!




'எல். ஜி. எம்' படத்தின் ஒவ்வொரு புதிய தகவல்களும் ரசிகர்களையும், பார்வையாளர்களையும் உற்சாகப்பட வைத்திருக்கிறது. மேலும் புதிய தகவல்களுக்காக ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். மைதானத்தில் 'கிரிக்கெட் மேதை' தோனியின் பரபரக்கும் கிரிக்கெட்டை கண்டு ரசித்தது முதல்... அவர் 'எல் ஜி எம்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டது வரை.. 'எல் ஜி எம்' படத்தில் பணியாற்றும் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 



'எல். ஜி. எம்' ஒரு ஃபீல் குட் பேமிலி எண்டர்டெய்னர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் என படக் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள். இந்த திரைப்படத்தை இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்ஷி தோனி வழங்குகிறார். விகாஸ் ஹசிஜா தயாரிப்பாளராகவும், பிரியான்ஷு சோப்ரா கிரியேட்டிவ் தயாரிப்பாளராகவும் பணியாற்றுகிறார்கள்.


மேலும் படிக்க |  இதற்காகத்தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு விளக்கினேன் - காவ்யா அறிவுமணி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ