லியோ படம் நாளை வெளியாக உள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் தளபதி விஜய் நடித்துள்ளார். எக்கச்சக்க எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் படம் வெளியாக உள்ளது. இதுவரை தமிழ் சினிமாவில் எந்த படமும் எட்டிடாட பிரம்மாண்ட வசூலுக்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. லியோ படத்தின் டிரைலரும் வேறலெவலில் ரீச் ஆனது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இந்த மாதிரியான சூழலில் தான் தற்போது விஜய் ரசிகர்கள் சிலர் செய்த செயல் கேலிக்கு உள்ளாகியுள்ளது. எக்ஸ் தளத்தில் ஸ்பேசில் பேசிய சிலர், டைட்டானிக் படத்தின் ஹீரோ லியார்னடோ டிகாப்ரியோ அமெரிக்காவில் லியோ படத்துக்கே அதிக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் அப்செட் ஆகிவிட்டதாகவும், தனது படமான Killers Of The Flower Moon-க்கு திரையரங்கள் கிடைக்கவில்லை என்று சொன்னதாகவும் தெரிவித்துள்ளனர். அதோடு, தனது படத்துக்கு அதிக காட்சிகள் வேண்டும் என்றும் டைட்டானிக் ஹீரோ அமெரிக்க அதிபர் ஜோ பைடனை சந்தித்து கோரிக்கை வைத்ததாகவும் பேசியுள்ளனர். 


மேலும் படிக்க | லியோ படத்தால் திரையரங்கிற்கு வந்த புதிய கட்டுப்பாடுகள்!





இதுசம்மந்தமான ஆடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உள்ளது. இந்த ஆடியோவை அடுத்து பலரும் விஜய் ரசிகர்களை வறுத்தெடுத்து வருகின்றனர். சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வாங்கிய நடிகர் லியார்னடோ லியோ படத்தை பார்த்து பயந்ததாக கூறுவதெல்லாம் வேறலெவல் நகைச்சுவை என்றும், உங்கள் அலம்பலுக்கு ஒரு அளவில்லையா என்றும் கலாய்த்து வருகின்றனர். அது எப்படி திமிங்கலம் டைட்டானிக் ஹீரோ விஜய்யை பார்த்து பயப்படுவாரு எனவும் நெட்டிசன்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். 


மேலும் படிக்க | லியோ படத்திற்கு 7 மணி காட்சிக்கு அனுமதி? தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ