திருமணம் செய்து கொண்டாரா ஸ்ருதிஹாசன்? உண்மையை உடைத்த காதலன்
தாங்கள் இருவரும் ஏற்கனவே திருமணம் செய்து கொண்டதாக ஸ்ருதிஹாசன் காதலர் பரபரப்பை கிளப்பியுள்ளார்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் பாலிவுட் என பான் இந்திய ஹீரோயினாக நடித்து வருகிறார். சாந்தனு ஹசாரிக்க என்ற டூடூல் கலைஞரை காதலித்த ஸ்ருதி ஹசான் அவருடன் பொதுவெளியில் உலா வந்தார். ஸ்ருதியின் காதலராக இருக்க வாய்ப்புள்ளது என பல யூகங்கள் வெளியானபோது, அவர்களே தாங்கள் இருவரும் காதலர்கள் என வெளிப்படையாக அறிவித்தனர்.
மேலும் படிக்க | ரசிகர்களிடம் கேள்வி எழுப்பிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!
ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு ஹசாரிக்கா விழா ஒன்றில் கமல்ஹாசனுடன் வேட்டி சட்டை கட்டிக் கொண்டு பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. அப்போது, முதல் இருவரும் மும்பையில் உள்ள வீட்டில் லிவ்விங் டு கெதர் வாழ்க்கையில் வாழத் தொடங்கினர். இடையே இருவருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக செய்திகள் உலா வந்த நிலையில், அதனை பொய் என மறுத்தார் காதலர் சாந்தனு.
இந்நிலையில், ஸ்ருதிஹாசனுடனான உறவுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய சாந்தனு ஹசாரிக்கா, திருமணம் உறவு குறித்து வெளிப்படையாக பதில் அளித்துள்ளார். லிவ்விங் டுகெதர் வாழ்க்கையில் இருந்து அடுத்தக்கட்டத்துக்கு செல்லும் முடிவு இருக்கிறதா? என கேட்கப்பட்ட கேள்விக்கு, தாங்கள் இருவரும் ஏற்கனவே திருமண பந்தத்தில் தான் இருப்பதாக கூறி பரபரப்பைக் கிளப்பியுள்ளார். எங்களுக்கே உரித்தான முறையில் நாங்கள் இருவரும் வாழ்ந்து வருவதாகவும், இப்போது ஸ்ருதிஹாசனுக்கும் தனக்கு நல்ல புரிதல் இருப்பதாக கூறியுள்ளார். ஸ்ருதிஹாசன் திருமணம் குறித்து அவருடைய காதலர் சாந்தனு ஹசாரிக்கா தெரிவித்த கருத்து சினிமா வட்டாரத்தை பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஸ்ருதிஹாசன் தற்போது பிரபாஸூக்கு ஜோடியாக சலார் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.
மேலும் படிக்க | ராஜமௌலி, ஜூனியர் என்டிஆர், ராம் சரணுக்கு வெற்றி மகுடம் சூட்டியதா?- RRR விமர்சனம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR