’ஆளப்போறான் தமிழன்’ பாடலை தெலுங்கில் கேட்டீர்களா?
விஜய் நடிக்கும் மெர்சல் படத்தின் ’ஆளப்போறான் தமிழன்’ பாடல் தமிழில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்பாடலின் தெலுங்கு வெர்சன் (பாலிந்சரா பிள்ளை) வெளியாகியுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆளப்போறான் தமிழன் பாடல் தமிழர்களின் பெருமையை சொல்லும்படி இருந்ததால் பெரும் வரவேற்பு பெற்றது. மேலும் இந்த பாடல் வெளியான வாரத்தில் கூகுள் டிரெண்ட்ஸில் வாரம் முதலிடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் விஜய் 61 படம் மெர்சல். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யராஜ், யோகிபாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பாடல்கள் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகியுள்ளது.
மெர்சல் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ("ஆதிதினி") என இரு மொழிகளிலும் வெளிவரவுள்ளது. தமிழில் வரும் அக்டோபர் 18-ம் தேதி 'மெர்சல்' வெளியீடு உறுதி என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 3.292 க்கு மேற்பட்ட திரையரங்களில் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கபடுள்ளது குறிப்பிடத்தக்கது!