பணத்தை நம்பி வாழவேண்டிய நிர்பந்தம் எனக்கு இல்லை - தெளிவுபடுத்திய அமீர்!
மதுரையில் பாட்ஷாவாக இருந்தவர் சினிமாவுக்கு வந்தபின் மாணிக்கமாக மாறிவிட்டார் என்று உயிர் தமிழுக்கு விழாவில் அமீர் குறித்து நெகிழ்ந்த நடிகர் பொன்வண்ணன்.
ஆன்டி இண்டியன் படத்தை தொடர்ந்து மூன் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆதம்பாவா தயாரித்துள்ள படம் ‘உயிர் தமிழுக்கு’. இந்தப்படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார் ஆதம்பாவா. அரசியல் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப்படத்தில் அமீர் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக சாந்தினி ஶ்ரீதரன் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்த்தராஜ், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, ராஜ்கபூர், சுப்ரமணியசிவா, மகாநதி சங்கர், ராஜசிம்மன், சரவணசக்தி மற்றும் பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு இப்படம் மூலம் வெற்றிகரமாக ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார் இசையமைப்பாளர் வித்யாசாகர். Pvr inox பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப்படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது. வரும் மே-10ஆம் தேதி உலகெங்கிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது.
மேலும் படிக்க | 41 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாத த்ரிஷா! காரணம் என்ன? அவரே சொன்ன விஷயம்..
இந்தநிகழ்வில் நாயகன் அமீர், நாயகி சாந்தினி, இயக்குநர் ஆதம்பாவா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் பொன்வண்ணன், இயக்குநர்கள் கரு.பழனியப்பன், எஸ்.ஆர் பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் நடிகரும் இயக்குனருமான சரவண சக்தி பேசும்போது, “அமீர் அண்ணன் நடிக்க ஆரம்பிப்பதற்கு முன்பே நானும் இயக்குனர் ஆதம்பாவாவும் அவரிடம் கதை சொல்வதற்காக சென்றோம். ஆனால் அன்று அவரை சந்திக்கவே முடியவில்லை. இன்று அவரை வைத்து படம் இயக்கும் அளவிற்கு நண்பர் ஆதம்பாவா உயர்ந்திருக்கிறார். ஆளில்லாத சிக்னலில் கூட அத்துமீறி சென்று விடக்கூடாது என நினைக்கிற ஒரு மனிதர் தான் அமீர் அண்ணன்.. அவரது சுய ஒழுக்கத்தை பார்த்து நான் பல விஷயங்களை திருத்திக் கொண்டேன்” என்று கூறினார்.
இயக்குனர் அமீர் பேசும்போது, “என்னுடைய திரை பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து, அரசியல் பயணம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து நான் சந்தித்திராத ஒரு புதிய மேடை இது. இந்த சூழலில் நான் யார் என யோசித்தால், ராமாயணத்தில் வரும் சீதையும் நானும் கிட்டத்தட்ட உடன் பிறந்தவர்கள் போல தான். அவர் அக்னியில் மிதந்து தன்னுடைய கற்பை நிரூபித்தார். அவராவது ஒரு முறை நிரூபித்தார்.. நான் வாரா வாரம் நிரூபித்துக் கொண்டே இருக்கிறேன். மாய வலை பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்த போது தான் பருத்திவீரன் பிரச்சனை துவங்கியது. அதன் பிறகு இப்போது வேறு ஒரு பிரச்சனையுடன் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. என்னை சுற்றி என்ன நடக்கிறது ? ஒன்றுமே புரியவில்லை.
கோகுலம் ஸ்டுடியோவில் இறைவன் மிக பெரியவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இன்னும் எட்டு நாட்கள் படப்பிடிப்பிற்காக ஒரு செட் ஒன்றை போட்டு ஒரு நாள் படப்பிடிப்பு நடத்தினோம். மறுநாள் மாலையில் இருந்து இந்த பிரச்சனை துவங்கியது. தன்னிலை விளக்கமாக ஒரு அறிக்கை ஒன்று கொடுக்கலாமா என கரு. பழனியப்பனிடம் கேட்டேன்... அப்படி ஒரு அறிக்கை கொடுத்த பிறகு எங்கிருந்து அதற்கு எதிர்ப்பு வருகிறது என பார்த்தால் கடந்த 15 வருடங்களில் என்னை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத ஆட்கள் எல்லாம் வெளியே வர ஆரம்பிக்கிறார்கள். பத்திரிக்கையாளர்கள் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. என்னிடம் நேரில் தொடர்பு கொண்டு பேசும் அளவிற்கு அவர்களுடன் நட்பு இருக்கிறது. ஆனால் இன்று ஊடகங்கள் பெருகிவிட்ட நிலையில், சிலர் வயிற்றுப் பசிக்காக ஏதேதோ செய்ய வேண்டி இருக்கிறது.
இறைவன் மிக பெரியவன் தயாரிப்பாளருடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்றால், ஆமாம் இருக்கிறது என்று சொல்வேன். ஆனால் அவர் மீது சாற்றப்பட்ட குற்றத்துடன் எனக்கு தொடர்பு இருக்கிறதா என்று கேட்டால் இல்லைடா வெண்ணைகளா என்று சொல்வேன். அந்த தைரியமும் திமிரும் எப்போதும் என்னிடம் இருந்து கொண்டே இருக்கிறது. சந்தேக நிழல் என் மீது விழுவதில் தவறு இல்லை.. ஆனால் நீங்களாகவே தீர்ப்பு எழுதுகிறீர்களே, அது தான் ரொம்ப ஆபத்தானது. உங்களுக்கு யார் அந்த அதிகாரம் கொடுத்தது ?
2007ல் பருத்திவீரன் முடித்த சமயத்தில் கமல் ரஜினி சார் ஆகியோர் என்னுடன் படம் பண்ண வேண்டும் என்றார்கள். ஆனால் ஹீரோக்களுடன் பயணிக்காமல் நான் எனக்காக ஒரு பாதையை தேர்ந்தெடுத்து எனக்கான வாழ்க்கையை வாழ வேண்டும் என வாழ்ந்து கொண்டிருக்கிறேன். பணம் சம்பாதிப்பதா என் நோக்கம் ? ஜாபர் ஒருத்தன் தான் தமிழ்நாட்டிலேயே பணக்காரனா ? ஜாபர் வந்த பிறகு தான் இவரது வாழ்க்கையை மாறிவிட்டது என்கிறார்கள். 2014ல் தான் அவர் வந்தார். ஆனால் விருமாண்டி ரிலீஸ் ஆன சமயத்திலேயே கொடைக்கானலில் ராம் படப்பிடிப்பு நடந்தபோது மதுரைக்கு இரண்டு லட்சம் செலவு செய்து படம் பார்க்க வந்தவன் நான்.. என்னைப் பற்றி என்ன தெரியும் உங்களுக்கு ? உதவி இயக்குனர்களாக நானும் பாலாவும் சினிமாவுக்கு வந்தபோது கஷ்டப்பட்டவர்கள் என்பதால் ஏதோ சென்னைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் போல நினைத்துக் கொள்கிறார்கள். சினிமாவிற்கு வந்ததால் வீட்டில் காசு வாங்காமல் சுயமரியாதையுடன் வந்தவர்கள் நாங்கள்..
மேலும் படிக்க | வெங்கடேஷ் பட் இல்லாமல் குக் வித் கோமாளி 5 எப்படியிருக்கு? ரசிகர்கள் விமர்சனம்..
ஒரு குற்றவாளி, அவருடன் உங்களுக்கு என்ன தொடர்பு இருக்கிறது என்று கேட்டால் பதில் சொல்ல போகிறோம். ஆனால் உங்களுக்கு இந்த வருமானம் எப்படி வந்தது என கேட்பதற்கு இவர்கள் என்ன வருமான வரித்துறையினரா ? காண்ட்ராக்டர் ஆக இருக்கும் என்னுடைய அண்ணன் ஒரு சொத்து வாங்கினாலே இந்த பணம் எப்படி வந்தது என நான் அவரிடம் கேட்க முடியாது. நான் இறை நம்பிக்கை கொண்டவன். கரு பழனியப்பன் ஒரு பெரியாரிஸ்ட்.. ஜனநாதன் ஒரு கம்யூனிஸ்ட்.. மூன்று பேரும் ஒன்றாக சுற்றிய காலகட்டத்தில் கூட நீ எப்படி பணம் சம்பாதிக்கிறாய் என ஒருவரை ஒருவர் கேட்டுக் கொண்டதில்லை. பணம் சம்பாதிக்கவா இந்த திரையுலகத்திற்கு வந்தேன் ? அதற்காக நான் வரவில்லை.. என் வாழ்க்கையை என் விருப்பம் போல வாழ வேண்டும் என இந்த நிமிடம் வரைக்கும் நான் ஆசைப்படுகிறேன்.
கடந்த பத்து நாட்களாக ஒவ்வொரு விசாரணைக்கும் சென்று கொண்டு இருக்கிறேன். இடையில் ஷாப்பிங் சென்று எனக்கு பிடித்த ஆடைகளை நான் வாங்குகிறேன். வேறு எந்த பழக்கங்களும் எனக்கு இல்லை. இன்னொருவருடைய பணத்தை நம்பி, அதுவும் ஒரு குற்றப் பின்னணி கொண்டவரின் பணத்தை நம்பி வாழ வேண்டிய நிர்பந்தம் எனக்கு ஏற்படவில்லை. அப்படி ஒரு வாழ்க்கையை வாழ நான் விரும்பவும் மாட்டேன். இதை உங்களிடம் கூறி நான் நிரபராதி, என்னை நம்புங்கள் என்பதற்காகவும் இதை கூறவில்லை.
எனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது என்று அவநம்பிக்கையுடன் நினைக்காமல், எனக்கு ஏன் இது நடந்தது என்று இறை நம்பிக்கையுடன் யோசிக்க கூடியவன் நான். இந்த இடத்தில் இருந்து இன்னும் என்னை சரி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு இருக்கிறது. அதனால் அதை நோக்கித்தான் நான் பயணிக்கிறேன். என்னைப் பற்றி பல தகவல்கள் கிடைத்தது என யூடியூப் சேனலில் பலவாறாக பேசிய ஒரு நபருக்கு, அவரை தேனியில் கைது செய்ய வரபபோகிறார்கள் என்கிற தகவல் மட்டும் எப்படி தெரியாமல் போனது ? அந்த நபர் சொல்லும் போய் செய்தியை தினசரி 2 லட்சம் பேர் பார்க்கிறார்கள். பல பேர் கமெண்ட்டுகளில் அமீரை எப்போது கைது செய்யப் போகிறீர்கள் என கேட்கிறார்கள். சிறை என்ன எனக்கு புதிதா ? நான் அப்போதும் தயாராக இருந்தேன். இப்போதும் தயாராக இருக்கிறேன்.. ஆனால் நான் வெறுக்கின்ற ஒரு குற்றத்தில் என்னை தொடர்பு படுத்துவதை தான் குற்ற உணர்ச்சியுடன் உணர்கிறேன். எனக்குள்ளும் வேதனை இருக்கிறது.
எனக்கு முதலில் வந்த சம்மனை கூட எனது வழக்கறிஞர் மூலமாக நான் சொன்ன பிறகுதான் வெளியே தெரிந்தது.. ? ஆனால் தங்களுக்கு ஏதோ டெல்லி வட்டாரத்தில் இருந் சோர்ஸ் மூலமாக தகவல் வந்தது என்பது போல பலர் பேசினார்கள்.. இப்போது சொல்கிறேன், எனக்கு இன்னொரு சம்மன் கூட வந்திருக்கிறது. புலனாய்வு புலிகள் என்று சொல்லிக் கொள்கிற பலருக்கு இது இன்னும் தெரியாது. இந்த சம்மனுக்கும் நேரில் சென்று பத்தரை மணி நேரம் விசாரணையை முடித்துவிட்டு தான் இங்கே வந்திருக்கிறேன். அதிகாரிகள் அவர்களது கடமையை செய்கிறார்கள்.. நான் அதற்கு முதல் நாளில் இருந்தே ஒத்துழைக்கிறேன்.. இந்த வழக்கை முடித்து விட்டு தான் எங்கேயும் வெளியே செல்வேன்.. நான் கூறும் கருத்துக்களை உங்களால் எதிர்கொள்ள முடியவில்லை.. அதனால் என்னை குற்றவாளி ஆத்துகிறீர்கள்.. அதனாலேயே ஏன் நான் குற்றவாளி ஆகிவிட முடியுமா ? ஒரு சிக்கலான காலகட்டத்தில் இந்த திரைப்படத்தை திரையரங்குகளுக்கு கொண்டு வருவதற்கு முயற்சி எடுத்த தயாரிப்பாளர், இயக்குனர் ஆதம் பாபாவுக்கு நன்றி” என்று கூறினார்.
மேலும் படிக்க | குக் வித் கோமாளி 5வது சீசன் ப்ரோமோ: இவர்கள் தான் இந்த சீசனின் கோமாளிகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ