கேம் சேஞ்சர் படம் எப்படி? வெளியானது முதல் விமர்சனம்!
Game Changer First Review : ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கேம் சேஞ்சர் படத்தின் முதல் விமர்சனம் தற்போது வெளியாகி இருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்பாேம்.
Game Changer First Review : தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற புகழப்படுபவர் ஷங்கர். ஜென்டில்மேன் படத்தில் ஆரம்பித்து, கடைசியாக வெளியான இந்தியன் 2 படம் வரை அனைத்திலும் புதுமையை பிரம்மாண்டமான வடியில் புகுத்தி எடுத்து வருபவர் இவர். தெலுங்கு நடிகர் ராம்சரணை ஹீரோவாக நடிக்க வைத்து இவர் எடுத்து இருக்கும் படம் கேம்ஸ் சேஞ்சர். இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இது குறித்த முதல் விமர்சனம் வெளியாகி இருக்கிறது.
கேம் சேஞ்சர் திரைப்படம்:
தெலுங்கு மொழியில் அரசியல் பின்புலம் சார்ந்த கதையாக உருவாகியிருக்கிறது கேம் சேஞ்சர். தெலுங்கில் டாப் ஸ்டார் ஆக விளங்கும் ராம்சரன் இந்த படத்தில் ஹீரோவாக நடித்த அவருக்கு ஜோடியாக கியாரா அத்வானி நடித்திருக்கிறார். இந்த படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் மட்டும் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்றது.
கார்த்திக் சுப்புராஜ் கதையை கொஞ்சம் டிரீம் செய்து மாற்றியமைத்து ஷங்கர் தனக்கேற்றார் போல் இந்த படத்தின் கதையை உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இது ராம்சரனும் 15வது படமாகும். ஹைதராபாத், நியூசிலாந்து, விசாகப்பட்டினம், மும்பை மற்றும் சண்டிகர் ஆகிய இடங்களில் இப்படத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் பத்தாம் தேதி வெளியாக உள்ளது. இதையடுத்து இந்தியாவின் இந்தியாவின் பல்வேறு முக்கியமான இடங்களுக்கு சென்று படக்குழு படத்தினை பிரமோட் செய்து வருகின்றனர். இந்த நிலையில் படத்தின் முதல் விமர்சனத்தையும் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
முதல் விமர்சனம்:
கேம் சேஞ்சர் படத்தை பார்த்த இயக்குனர் ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா இந்த படத்தை பார்த்து விட்டு தனது முதல் விமர்சனத்தை பதிவிட்டிருக்கிறார். இவர், பட தயாரிப்பாளரும் கூட.
கேம் சேஞ்சர் படம் குறித்து அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஷங்கரின் சமூகம் தொடர்பான கதைகளை பார்த்து எத்தனை நாட்கள் ஆகிறது? இப்போது அவர் தனது ஒவ்வொரு ஃப்ரேமிலும் சமூக பிரச்சனைகளை பேசும் படம் ஒன்றை எடுத்திருக்கிறார்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மேலும், “அன்புக்குரிய சகோதரன் ராம் சரண் தனது வெவ்வேறு விதமான நடிப்பினை காட்டியிருக்கிறார். படம் பார்ப்பவர்களுக்கு இது கொண்டாட்டமாக இருக்கும். டியர், சங்கராந்தி சீக்கிரமாக வா, இவர்கள் இணைந்திருக்கும் படத்தை பெரிய ஸ்க்ரீனில் பார்க்க ஆர்வமாக இருக்கிறோம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கம்-பேக் கொடுப்பாரா ஷங்கர்?
இயக்கநர் ஷங்கர் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழில் தோல்வி பெறாத இயக்குநர்களின் பட்டியலில் ஒருவராக இருந்தார். ஆனால், கடந்த ஆண்டு வெளியான இந்தியன் 2 திரைப்படம் அது அனைத்தையும் கெடுத்து விட்டது. காரணம், இந்த படத்தின் கதை அவுட்-டேட் ஆகி விட்டதால், ரசிகர்கள் மத்தியில் ட்ரோல் செய்யப்பட்டது. இந்த நிலையில், கேம் சேஞ்சர் படம் மூலமாகவாவது ஷங்கர் கம்-பேக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | கேம் சேஞ்சர்: விஜய்க்கு ஷங்கர் போட்ட கண்டீஷன்! கேட்டவுடன் நோ சொன்ன தளபதி..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ