மூக்குத்தி அம்மன் 2 படத்தின் இயக்குநர் யார்? ஆர்.ஜே.பாலாஜி இல்லை..‘இவர்’தான்!
Mookuthi Amman 2 Director : சமீபத்தில், மூக்குத்து அம்மன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை இயக்க இருப்பது யார் தெரியுமா?
Mookuthi Amman 2 Director : மக்களுக்கு பிடித்த தெய்வீக படங்களுள் ஒன்று, மூக்குத்தி அம்மன். இந்த படத்தில், ஆர்.ஜே பாலாஜி நடித்து இயக்கி இருந்தார். இந்த படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு சில நாட்களுக்கு முன்னர் வெளியானது.
மூக்குத்தி அம்மன்:
ஆரம்பத்தில், காமெடி நடிகராகவும் துணை நடிகராகவும் மட்டும் இருந்த ஆர் ஜே பாலாஜி ஒரு கட்டத்துக்கு பிறகு தானே படத்தை இயக்கி நடிக்க தொடங்கினார். அப்படி அவர் நடித்த படம் தான், மூக்குத்தி அம்மன். இந்த படம், 2020 ஆம் ஆண்டு வெளியானது. தியேட்டரில் வெளியாக இருந்த படம், கொரோனா ஊரடங்கு காரணமாக டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியானது.
நயன்தாரா இப்படத்தில் அம்மனாக நடித்திருந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை கவர்ந்த காமெடி கலந்த சமூக அக்கரை கொண்ட படமாக இருந்தது, மூக்குத்தி அம்மன். இதில் ஆர்.ஜே பாலாஜி உடன் இணைந்து ஊர்வசி, அபி நட்சத்திரா, அஜய் கோஷ், மனோ பாலா, மௌலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கதை:
சாமி பெயரை வைத்து பொதுமக்களை ஏமாற்றும் சாமியார் பேர் வழிகளை கலாய்க்கும் வகையிலும், சமூகத்திற்கு கருத்து சொல்லும் வகையிலும் எடுக்கப்பட்ட வளம் தான் மூக்குத்தி அம்மன். இப்படம் பலரை சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி சிந்திக்கவும் வைத்தது. ஆர்.ஜே பாலாஜியுடன் இணைந்து என் ஜி சரவணன் என்பவரும் படத்தை இயக்கியிருந்தார்.
மேலும் படிக்க | RJ Balaji: ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் அடுத்த படம்! மிரட்டல் போஸ்டர் வெளியீடு..
மூக்குத்தி அம்மன் 2:
மூக்குத்தி அம்மன் 2 படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பினை வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் சில வாரங்களுக்கு முன் வெளியிட்டது. அதில், இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாகவும் பக்திக்கான போர் தொடங்கி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இயக்குனர் யார் என்பது குறித்த விவரமோ, வேறு யார் யார் நடிக்கின்றனர் என்பது குறித்த விவரமும் அதில் வெளியிடப்படவில்லை. முதல் பாகத்தை ஆர் ஜே பாலாஜி இயக்க, இந்த பாகத்தையும் அவரே இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.
இயக்குனர் யார்?
தமிழ் சினிமாவில் பக்தி மற்றும் பேய் படங்களை இயக்குவதற்கு பெயர் போன இன்னொரு இயக்குனர் சுந்தர்.சி. இவர்தான், தற்போது மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க இருப்பதும் இவர்தான் என கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி எடுக்கும் பாணியில் இவர் கதை எடுப்பது கஷ்டம்தான் என்றாலும், நயன்தாராவே இதிலும் நடிப்பதால் இதை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது மாசாணி அம்மன் எனும் படத்தின் கதை எழுதும் பணிகளில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் த்ரிஷா நடிப்பதாகவும் இது மூக்குத்தி அம்மன் படத்தின் கதை போல இருக்காது என்றும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவுப்புகள் இன்னும் வெளியாகவில்லை.
மேலும் படிக்க | மூக்குத்தி அம்மன் 2 படத்தில் ஆர்.ஜே.பாலாஜி ஹீரோ இல்லை! ஏன் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ