வலிமை படம் எப்படி? இயக்குநர் ஹெச்.வினோத் Review
வலிமை முதல்நாள் முதல் ஷோ பார்க்கமாட்டேன் என இயக்குநர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.
3 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் நடிகர் அஜித்தின் வலிமை திரைப்படத்தைக் கொண்டாட ரசிகர்கள் காத்திருக்கின்றனர். படம் ரிலீஸாக 24 மணி நேரத்துக்கும் குறைவான நேரம் மட்டுமே உள்ளது. உலகம் முழுவதும் சுமார் 4000 தியேட்டர்களில் பிரம்மாண்டமாக வலிமை ரிலீஸாகிறது. நடிகர் அஜித்குமாரின் முதல் பான் இந்தியா படம் என்பதால், வசூலில் மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் வெளியாகும் வலிமை திரைப்படத்துக்கு, இந்தியா மட்டுமல்லாது உலகளவிலும் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன
மேலும் படிக்க | Bigg Boss Ultimate-ல் இனி சிலம்பாட்டம்: கமலுக்கு பதில் வருகிறார் சிம்பு!!
அமெரிக்கா, சிங்கப்பூர், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் வலிமை படத்துக்கான முதல் ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டது. படத்திற்கான வரவேற்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில், வலிமை படத்தின் முதல் நாள் முதல் ஷோவை தான் பார்க்கப்போவதில்லை என இயக்குநர் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். படம் குறித்து பேசிய அவர், படத்தை ஏறகனவே பல முறை பார்த்துவிட்டதால், முதல் நாள் முதல் ஷோவை பார்க்கவில்லை எனக் கூறியுள்ளார்.
வலிமை படத்தின் கதை பல பதிப்புகளாக ஒரே மூச்சில் எழுதி முடிக்கப்பட்டதாக கூறியுள்ள அவர், அஜித் நடிக்கிப்போகிறார் என தெரிந்தவுடன் சில அப்கிரேடுகள் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பமாக பார்க்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வலிமை படம் உருவாகியிருப்பதாகவும் ஹெச் வினோத் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்துக்கு வீரம் மற்றும் விஸ்வாசம் திரைப்படங்கள் பெரும் குடும்ப பார்வையாளர்களை உருவாக்கி வைத்திருக்கிறது. ஆக்ஷன் மற்றும் சென்டிமென்ட் என இரண்டும் இருப்பதால் குடும்ப பார்வையாளர்களையும் கடந்து அஜித் ரசிகர்களுக்கும் விருந்தாக வலிமை இருக்கும் என ஹெச் வினோத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | த்ரிஷ்யம் கூட்டணியின் அடுத்த படமும் ஓடிடி ரிலீஸ்?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR