தீபாவளிக்கு மொத்தம் 4 படங்கள் ரீலீஸாகிறது. அவற்றில் காஷ்மோரா , கொடி என இரு பெரிய பட்ஜெட் படங்களுக்கு, திரைக்கு வராத கதை மற்றும் கடலை என இரு சிறிய பட்ஜெட் படங்கள் திரைக்கு வருகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

காஷ்மோரா !


 ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் நடிப்பில் உருவாகியுள்ள காஷ்மோராவை கோகுல் இயக்கியுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.60 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 1700 திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது. 


கொடி !


துரை செந்தில்குமார் இயக்கத்தில், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி தயாரிப்பில், சந்தோஷ் நாராயணன் இசையில், முதன் முறையாக தனுஷ் இரட்டை வேடத்தில் தனுஷ் மற்றும் த்ரிஷா, அனுபமா பரமேசவ்ரன், எஸ்.ஏ.சந்திரசேகர், சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடித்துள்ள படம் கொடி. 


திரைக்கு வராத கதை !


கே. மணிகண்டன் தயாரிப்பில், துளசிதாஸ் இயக்கத்தில், நதியா, இனியா, கோவை சரளா, ஆர்த்தி என பெண்கள் மட்டுமே நடித்துள்ள படம் திரைக்கு வராத கதை. இப்படத்தில், பெண்கள் மட்டுமே நடித்துள்ளதால், படம் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.


கடலை !


மா.கா.பா.ஆனந்த், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பொன்வண்ணன் நடித்திருக்கும் படம் தான் கடலை. இப்படத்தை சகாய சுரேஷ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்துக்கு இசை சாம் சி.எஸ் அமைத்துள்ளார். நகைச்சுவை மற்றும் காதல் கலந்து திரைப்படமாக உருவாக்கியுள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் தினமும் பயன்படுத்தும் வார்த்தை கடலை. 


இந்த நான்கு படங்களில் எது ஜெயிக்கும்? என ஆவலோடு காத்திருக்கிறது தமிழ் திரையுலகம். அதைத் தீர்மானிக்கும் ரசிகர்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றனர்.