Chithha OTT Release Date: இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார்,  நடிகர்கள் சித்தார்த், நிமிஷா சஜயன் மற்றும் சஹஸ்ரா ஸ்ரீ ஆகியோர் நடிப்பில்,  இயக்குநர் SU அருண் குமார் இயக்கத்தில் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களால் கொண்டாடப்பட்ட 'சித்தா' திரைப்படத்தை, நவம்பர் 28 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைவராலும் பாராட்டப்பட்ட “சித்தா” திரைப்படம்


திரை விமர்சகர்களால் இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம் என்று பாராட்டப்பட்ட “சித்தா” படம், குழந்தை கடத்தல் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல் போன்ற முக்கியமான சமூகப் பிரச்சினைகளை அழுத்தமாகப் பேசும், அற்புதமான டிராமா திரைப்படமாகும். தமிழ்த் திரையுலகில் இதுவரை திரையில் பேசப்படாத சில முக்கியமான விஷயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டிய விதத்திற்காக, இப்படம் அனைவராலும் பாராட்டப்பட்டது.


உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம்


ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு, இக்கதை உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டின் பழனி நகரத்தில் நடப்பதாக  அமைக்கப்பட்டுள்ள இக்கதை, பள்ளிக்குச் செல்லும் ஒரு சிறுமி  கடத்தப்படுவதைச் சுற்றிச் சுழல்கிறது. அந்தக் கடத்தலால் அந்த சிறுமியின் குடும்பமும், அக்குழந்தையும் படும் துயரத்தையும், அந்தக் குழந்தையை மீட்க குடும்பத்தினர் எடுக்கும் முயற்சிகளையும் இக்கதை பரப்பரப்பாகச் சொல்கிறது. 



மேலும் படிக்க - ‘சித்தா’ திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ்! எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?


“சித்தா” படத்தில் நடித்தவர்களின் விவரங்கள்


நடிகர் சித்தார்த் அவர்கள், தானே தயாரித்து நடித்திருக்கும் இந்த அற்புதமான திரைப்படம், குடும்ப ரசிகர்களை கவர்ந்திழுக்கும். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் இப்படம் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது. இப்படத்திற்கு திபு நினன் தாமஸ்  மற்றும் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளனர். ஒளிப்பதிவு பாலாஜி சுப்ரமணியம்.


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பற்றி: 


டிஸ்னி+ ஹாட்ஸ்டார் (முந்தைய ஹாட்ஸ்டார்) என்பது இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமாகும், இது இந்தியர்களின்  பொழுதுபோக்கு முறையை மாற்றியுள்ளது - அவர்களுக்குப் பிடித்த டிவி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்கள் முதல் விளையாட்டு நிகழ்வுகள் வரை, இந்தியாவில் பரந்த அளவிலான உள்ளடக்கத்துடன், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் 8 மொழிகளில் 100,000 மணிநேரத்திற்கும் அதிகமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை வழங்குகிறது மற்றும் ஒவ்வொரு முக்கிய உலகளாவிய விளையாட்டு நிகழ்வின் கவரேஜையும் வழங்குகிறது.


மேலும் படிக்க - திரிஷா குறித்து சர்ச்சை பேச்சு! மன்சூர் அலிகானுக்கு மேலும் புதிய சிக்கல்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ