Best Malayalam crime thriller movies: தற்போது பலரும் சஸ்பென்ஸ் மற்றும் திரில்லர் படங்களை தேடி தேடி பார்க்கின்றனர். குறிப்பாக மலையாளத்தில் வெளியாகும் படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நிறைய வரவேற்பு உள்ளது.  மலையாள சினிமாவில் வெளியாகும் க்ரைம் த்ரில்லர் படங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக எடுக்கப்படுகின்றன.  இதன் காரணமாக இந்த படங்களுக்கு நிறைய வரவேற்பு இருந்து வருகிறது. நீங்களும் கிரைம் திரில்லர் படங்களை தேடி தேடி பார்பவர்களாக இருந்தால் பின்வரும் இந்த மலையாள படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மெமரிஸ் (Memories )


2013ம் ஆண்டு வெளியான மெமரிஸ் படம் மலையாளத் திரையுலகில் வெளியான மற்றுமொரு சிறந்த திரில்லர் படம் ஆகும்.  பிருத்விராஜ் சுகுமாரன் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மெமரிஸ் படத்தில் எஸ்பி ஸ்ரீகுமார், விஜயராகவன், மேகனா ராஜ், மியா ஜார்ஜ், சுரேஷ் கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ளனர்.  2 மணி நேரம் 23 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படம் Disney+ Hotstarல் உள்ளது.


மேலும் படிக்க | Pushpa 2 The Rule: இணையத்தில் சாதனை படைத்துள்ள அல்லு அர்ஜுனின் புஷ்பா 2 டீசர்!


த்ரிஷ்யம் (Drishyam )  


மலையாளத்தில் வெளியான சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களில் ஒன்று த்ரிஷ்யம். ஜீத்து ஜோசப் எழுதி இயக்கிய இப்படத்தில் மோகன்லால், மீனா, அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், கலாபவன் ஷாஜோன், ஆஷா சரத், சித்திக் மற்றும் ரோஷன் பஷீர் ஆகியோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 40 நிமிடங்கள் ஓடும் இந்த படம் தற்போது Disney+ Hotstar ஓடிடியில் உள்ளது.  கேபிள் டிவி ஆபரேட்டரான இருக்கும் ஜார்ஜ்குட்டி தனது குடும்பத்திற்காக செய்யும் விஷயங்களை சுவாரஸ்யமாக காட்டி உள்ளனர்.  இப்படத்தின் தொடர்ச்சியாக த்ரிஷ்யம் 2 படமும் உள்ளது.


எல வீழ பூஞ்சிரா (Ela Veezha Poonchira)


ஏலா வீழா பூஞ்சிரா படம் பூஞ்சிரா மலை உச்சியில் உள்ள காவல்துறை அதிகாரியான மதுவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட க்ரைம் திரில்லர் திரைப்படமாகும். சௌபின் ஷாஹிர், சுதி கொப்பா, ஜூட் அந்தனி ஜோசப், ஜித்து அஷ்ரஃப் ஆகியோர் இந்த படத்தில் நடித்துள்ளனர்.  1 மணிநேரம் 44 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.


கண்ணூர் ஸ்குவாட் (Kannur Squad)


தமிழில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று படத்தை போலவே மலையாளத்தில் வெளியாகி உள்ள படம் கண்ணூர் ஸ்குவாட். க்ரைம் திரில்லர் ரசிகர்களுக்கு இப்படம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறலாம். ஒளிப்பதிவாளரும் இயக்குனருமான ராபி வர்கீஸ் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மம்முட்டி, ரோனி டேவிட் ராஜ், அஸீஸ் நெடுமங்காட், ஷபரீஷ் வர்மா, கிஷோர் ஆகியோர் நடித்துள்ளனர்.  2 மணி நேரம் 41 நிமிடங்கள் ஓடும் இப்படம் Disney+ Hotstar ஓடிடியில் உள்ளது.  


ஜோசப் (Joseph)


மலையாளத்தில் வெளியான வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் திரைப்படங்களில் ஜோசப் ஒன்றாகும். ஜோசப் என்ற ஓய்வுபெற்ற காவல் துறை அதிகாரியை சுற்றி படம் நகர்கிறது.  இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், திலீஷ் போத்தன், இர்ஷாத், ஆத்மியா ராஜன், ஜானி ஆண்டனி, சுதி கொப்பா மற்றும் மாளவிகா மேனன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. 2 மணி நேரம் 18 நிமிடங்கள் ஓடும் இப்படம் அமேசான் பிரைம் வீடியோவில் உள்ளது.


அஞ்சம் பத்திர (Anjaam Pathira)


கடந்த 2020ம் ஆண்டு வெளியான சூப்பரான ஒரு கிரைம் திரில்லர் படம் அஞ்சம் பத்திர. மலையாள சினிமாவில் கட்டாயம் பார்க்க வேண்டிய கிரைம் த்ரில்லராக அமைந்தது. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கிய இப்படத்தில் குஞ்சாக்கோ போபன், ஷரஃப் யு தீன், ஸ்ரீநாத் பாசி, உன்னிமய பிரசாத், ஜினு ஜோசப் ஆகியோர் நடித்துள்ளனர்.  2 மணி நேரம் 24 நிமிடங்கள் ஓடும் இப்படம் Sun NXT தளத்தில் உள்ளது.


அன்பேஷிப்பின் கண்டேதும் (Anweshippin Kandethum)


அன்பேஷிப்பின் கண்டேதும் மலையாளத்தில் சமீபத்தில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படமாகும். இந்த படத்தில் டோவினோ தாமஸ், வினீத் தட்டில் டேவிட், பிரமோத் வெளியநாடு, பாபுராஜ், சாதிக், ஷம்மி திலகன், மற்றும் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.  2 மணி நேரம் 22 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இப்படம் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் உள்ளது.


மேலும் படிக்க | Summer Memes : “எரியுதுடி மாலா..” தமிழகத்தில் தாளாத வெயில்-இணையத்தில் நெட்டிசன்களின் மீம் கலாட்டா!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ