ஆபாச திரை வாழ்க்கையில் இருந்து குடும்ப வாழ்க்கைக்கு திரும்பியிருக்கும் சன்னி லியோன், தன்னுடைய வாழ்க்கை குறித்த பயண அனுபவங்களை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார். அதில், தன்னுடைய கடந்தகால வாழ்க்கை குறித்தும் பேசியுள்ளார். இப்போது எனக்கு இருக்கும் வாழ்க்கையை நான் அனுபவித்து வாழ்க்கிறேன், ஆனால், கடந்த காலத்தில் நான் எடுத்த முடிவுகளை வேறு யாரும் எடுக்கக்கூடாது என தெரிவித்துள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | துல்கர் சல்மானுடன் டூயட் பாடிய சிவாங்கி - குக் வித் கோமாளியில் அட்ராசிட்டி


" அந்த வாழ்க்கையை தான் விரும்பவில்லை. அதேநேரத்தில் எனக்கு நான் உண்மையாக இருந்தேன். அந்த விஷயம் மட்டுமே எனக்கு நான் செய்து கொண்ட மிகச்சிறந்த விஷயமாக பார்க்கிறேன். மற்றதெல்லாம் தானாக நடந்தது. என்னிடம் ஒருபோதும் நான் பொய்களை கூறிக் கொண்டதில்லை. மற்றவர்களிடமும் அதனை செய்யவில்லை. நான் யார் என்பதை வெளிப்படையாக கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. ஆனால், என்னுடைய வாழ்வில் விரும்பாத பகுதி அது



இப்போது எனக்கு நல்ல இல்வாழ்க்கை அமைந்திருக்கிறது. கணவர் டேனியல் வெப்பருக்கும், எனக்கும் இடையே நல்ல கெமிஸ்டிரி மற்றும் புரிதல் உள்ளது. இருவரும் தொழில் மற்றும் பர்சனல் குறித்து அதிகம் உரையாடுவோம். இருவரை பொறுத்தவரையில் குடும்பம் மட்டுமே முதன்மையானது. குடும்பத்தோடு நேரத்தை செலவிடவே அதிகம் விரும்புகிறோம். இப்போது வாழ்க்கை நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது" எனத் தெரிவித்துள்ளார். பாலிவுட் நடிகை சன்னிலியோன் அனாமிகா என்ற வெப்சீரிஸில் நடித்துள்ளார். ஏஜென்ட் எம் என்ற கதாப்பாத்திரத்தில் அவர் நடித்துள்ள வெப்சீரிஸூக்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளார். 


மேலும் படிக்க | ‘விஜய்-66’ வில்லன் இவரா!? இவரு லிஸ்ட்லயே இல்லையே!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR