மெகா ஸ்டார்கள் பிரபாஸ், சைஃப் அலிகான் நடிக்கும் Adipurush திரைப்படத்தில் கிருதி சனோன், சீதாவாக நடிக்கிறார் என்ற ஒரு செய்தி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது உண்மையா இல்லையா வெறும் வதந்தியா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரபாஸ் (Prabhas), சைஃப் அலிகான் (Saif Ali Khan) நடித்த மெகா பட்ஜெட் pan-India திரைப்படம் ஆதிபுருஷ் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. பாகுபலி நட்சத்திரம் பிரபாஸ் ராமராகவும், சைஃப் அலிகான் வில்லன் கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள். இப்படத்தில் அஜய் தேவ்கன், சிவன் (Lord Shiva) கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று முன்னர் செய்தி வெளியானது. இப்படத்தை ஓம் ரவுத் இயக்குகிறார்.  



முன்னதாக, அனுஷ்கா ஷெட்டி (Anushka Shetty), அனுஷ்கா ஷர்மா (Anushka Sharma), கியாரா அத்வானி (Kiara Advani), கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh) என பல பிரபல நடிகைகளின் பெயர் இந்த திரைப்படத்தில் சீதா கதாபாத்திரத்திற்காக பரிசீலிக்கப்பட்டன.   


"இந்தி மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான பல நடிகைகளை பரிசீலித்த பிறகு, கிருதியின் பெயர் முடிவு செய்யப்பட்டுள்ளது. அவதார் மற்றும் ஸ்டார் வார்ஸ் போன்ற படங்களில் பணிபுரிந்து சர்வதேச புகழ்பெற்ற வி.எஃப்.எக்ஸ் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஓம் மற்றும் பூஷண்,  இந்த திரைப்பட்த்தில் பணியாற்றுவார்கள். சீதா கதபாத்திரத்தில் நடிப்பது கிருதிக்கு ஒரு அரிய அற்புதமான வாய்ப்பு" என்று தங்களுக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரம் கூறியதாக Mumbai Mirror கூறுகிறது.   



திரைப்படம் 2022 ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகும் என்பதால், மிகவும் பிரம்மாண்டமாக திரைபப்டம் இருக்கும் என்பதால், ஆதிபுருஷ் ஆவலை கூட்டும் படமாக இருக்கிறது.  தற்போது ”ஹம் தோ ஹமரே தோ” (Hum Do Hamare Do) என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கிருதி சானோன். இதைத் தவிர, பச்சன் பாண்டே (Bachchan Panday) உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.  



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR