45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா
தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என அன்பாக அழைக்கப்படும் அஜித் காதாநாயகர்களுக்கு இடையே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து நடித்து வருபவர்.
பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் அஜித் குமார் (Ajith Kumar). தமிழ் சினிமா ரசிகர்களால் ‘தல’ என அன்பாக அழைக்கப்படும் அஜித் காதாநாயகர்களுக்கு இடையே தனக்கென ஒரு தனி பாணியை அமைத்து நடித்து வருபவர்.
தற்போது அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இப்படத்தை இளம் இயக்குனராக எச்.வினோத் இயக்கி வருகிறார். அஜித் பல இளம் இயக்குனர்களின் படங்களில் நடித்துள்ளார் என்பதும் புதிய இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களது வெற்றிக்கு பல முறை காரணமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் (Bollywood) முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான போனி கபூர் இதற்கு முன்னர் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கினார். அதைத் தொடர்ந்து அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தையும் போனி கபூரே இயக்கி வருகிறார்.
அஜித் தற்போது தான் நடிக்கும் படங்களுக்கு 40-50 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தன் திறமையின் உதவியால் புகழின் உச்சத்திற்கு சென்றுள்ள அஜித், இந்தத் துறைக்கு முதன் முறையாக வந்தபோது வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
அஜித்தின் முதல் சம்பளம் 2,500 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உழைப்பால் உயர நினைப்பவர்கள் அஜித் போன்ற மனிதர்களைப் பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்ளலாம். ஆரம்பத்திலேயே அதிகமாகப் பெற ஆசைப்படாமல், நம் திறமையை வளர்த்துகொண்டு, வரும் வாய்ப்புகளை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டு, கடினமாக உழைத்தால் வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி காணலாம் என்பதற்கு அஜித் ஒரு எடுத்துக்காட்டு. சினிமாவில் தனக்கென எந்த ஆதரவும் இல்லாமல் தன் சொந்த உழைப்பாலும் திறமையாலும் உயர்ந்தவர் அவர்.
சினிமா என்று மட்டுமில்லாமல், எல்லா துறைகளுக்கும் இந்த கோட்பாடு பொருந்தும். உழைத்தால் கை மேல் பலன் கிடைப்பது நிச்சயம்.
ALSO READ: ‘தலைவி’ பட shooting மீண்டும் துவக்கம்: மகிழ்ச்சியில் படங்களை share செய்த Kangana\
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR