புதுடெல்லி: ‘KGF’திரைப்படம் வெள்ளித்திரையில் வெளியாகி சக்கை போடு போட்டது. அந்த திரைப்படம் பல்வேறு தரப்பினரின் வரவேற்பையும் பெற்றது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

யாஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றியை ஈட்டிய திரைப்படம் 'கே.ஜி.எஃப்'. கன்னட மொழியில் உருவான இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது.
கன்னட மொழி திரைப்படங்களில் மிகவும் பேசப்பட்ட இந்த திரைப்படம், தமிழிலும் வெளியாகி அனைவரின் மனதையும் கவர்ந்தது. மும்பையில் வளரும் நாயகன், தங்கச் சுரங்கத்திற்குள் சென்று அங்கு அடிமையாய் அடைபட்டிருக்கும் மக்களைக் காப்பாற்றுவார். தனது போராட்டமான குழந்தைப் பருவத்தில் அம்மா சொன்ன விஷயங்களை மந்திரமாக மனதில் உருவேற்றி வைத்திருப்பார். அதை பயன்படுத்தி வெற்றி ஈட்டுவார் கதாநாயகன்.


அந்தத் திரைப்படம் ஏற்படுத்திய தாக்கம், அதன் இரண்டாம் பாகம் வெளியாகும் நாளை ஆவலுடன் எதிர்ப்பார்க்க வைத்திருக்கிறது.


தொடர்புடைய செய்தி | 800 படத்திற்கு விஜய் சேதுபதி மிகவும் பொருத்தமானவர்  


முதல் பான் இந்தியப் படம், ‘கே ஜி எஃப் (சேப்டர் 2)  இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.  


இவ்வளவு மதிப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியிருக்கும் KGF: Chapter 2 திரைப்படம், 2021 ஜனவரி 14 ஆம் தேதியன்று நாடு முழுவதும் வெளியாகும்.


திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக் கட்டத்தில் உள்ளது.  படத்தின் முழு படப்பிடிப்பும் இம் மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று தயாரிப்பாளர்கள் அறிவித்தனர்.


பிரசாந்த் நீல், யாஷ், ஸ்ரீநிதி ஷெட்டி என பல பிரபலங்கள் பலரின் கடினமான உழைப்பில் உருவாகும் ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமான KGF: Chapter 2, 2021ஆம் ஆண்டு பொங்கல் அன்று தெலுங்கு, கன்னடம், இந்தி, தமிழ், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிடப்படும்.


கே ஜி எஃப் (சேப்டர் 2)  இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, ஆனந்த் நாக் நடிக்கும் அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் விஜய் கிரகண்டுர் தயாரிக்க, இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார். 


இப்படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ் உட்பட பல பிரபலங்கள் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.


கொரோனா எப்போது முடியும், அருமையான படத்தை எப்போது பார்க்கப் போகிறோம் என்று அனைவரும் காத்திருக்கும் நேரத்தில் ஆக்‌ஷன் மற்றும் பொழுதுபோக்கு திரைப்படமான KGF: Chapter 2, பொங்கலுக்கு ரிலீஸாகும் போது, உலகத்தில் இருந்து கொரோனாவின் தாக்கமும் ரிலீஸானால் அனைவருக்கும் இரட்டை மகிழ்ச்சியாக இருக்கும்.


தொடர்புடைய செய்தி | 45 கோடி சம்பளம் வாங்கும் தல அஜித்தின் முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR