‘வத்திக்குச்சி' படத்தை இயக்கிய இயக்குநர் பா.கின்ஸ்லின் அடுத்ததாக புதிய படம் ஒன்றை இயக்கிவருகிறார். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் இப்படத்துக்கு டிரைவர் ஜமுனா என பெயரிடப்பட்டுள்ளது. இவருடன் 'ஆடுகளம்', நரேன், ஸ்ரீ ரஞ்சனி, 'ஸ்டான்ட் அப் காமடியன்' அபிஷேக், 'ராஜாராணி' பட புகழ் பாண்டியன், கவிதா பாரதி, பாண்டி, மணிகண்டன் ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.ஜிப்ரான் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வைரலானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'டிரைவர் ஜமுனா' படத்தில் இடம் பெற்றுள்ள "கூல் ட்யூட்" பாடலின் ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. படு ட்ரெண்டியாக உருவாகியிருக்கும் பாடலில் ஐஸ்வர்யா ராஜேஷின் லுக்கும், உடைகளும் இதுவரை காணாத ஐஸ்வர்யாவை காண்பிக்கின்றன. மேலும் மேக்கிங்கும் ஸ்டைலிஷாக இருக்கிறது.


 



இந்தப் பாடலை கவிஞரும், பாடலாசிரியருமான அ.ப.ராசா எழுதியுள்ளார். இவர் ஏற்கனவே குக் வித் கோமாளி அஷ்வின் நடனம் ஆடிய குட்டி பட்டாஸ் பாடல் எழுதி பிரபலமானவர்.


 



இந்தப் பாடலிலும் பல ட்ரெண்டியான வரிகளை ராசா எழுதியிருக்கிறார். தற்போது இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.


மேலும் படிக்க | மீண்டும் உயர்ந்த ரெப்போ விகிதம்! உயர்கிறது வீடு, வாகன EMI-கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ