தமிழகத்தில், திரையரங்குகளில் டிக்கெட்டுகளுக்கான விலை 28% ஜிஎஸ்டி வரி மற்றும் 30% கேளிக்கை வரி என இரண்டு வரிகள் இணைக்கப்பட்டு விலை அதிகரிப்பு செய்யப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் தமிழக அரசு, கடந்த 27-ஆம் தேதி முதல் புதிய கேளிக்கை வரியில் திருத்தம்செய்து அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையின்படி கேளிக்கை வரி 30% இருந்து 10% குறைக்கப்பட்டது.


இதனையடுத்து இன்று தமிழக முதல்வரை சந்தித்தப்பின் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைவர் தெரிவித்துள்ளதாவது, கேளிக்கை வரியினை முழுமையாக அகற்ற கோரிக்கை வைக்கப்பட்டது, ஆனால் 10% இருந்து 8% வரி குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


எனினும், தற்போது போடப்பட்டிருக்கும் புதிய வரி விதிப்பிலும் தியேட்டர்களில் டிக்கெட் விலை அதிகரிக்கக் கூடும் என்று கூறப்படுகிறது.  


இதற்கிடையில், நடிகர் விஷால் இன்று காலை, திரையரங்குகளில் புதிய விதிகளைப் பின்பற்றும்படி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- 


* நாளை முதல் அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணம்தான் தியேட்டர்களில் வசூலிக்க வேண்டும்.


* கேன்டீன்களில் அரசு நிர்ணயம் செய்துள்ள MRP விலைக்குதான் பொருள்களை விற்க வேண்டும். 


* அம்மா தண்ணீர் பாட்டில் விற்கப்பட வேண்டும். தண்ணீர் கொண்டு வர மக்களை அனுமதிக்க வேண்டும். 


* திரையரங்குகளில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக்கூடாது. 


* விரைவில் ஆன்லைன் கட்டணமும் குறைக்கப்படும் 


என தெரிவத்துள்ளார். மேலும் இந்த அறிவிப்பை மீறும் திரையரங்கம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.