சூரரை போற்று, ஜெய் பீம் போன்ற படங்களின் வெற்றிக்கு பிறகு சூர்யா ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருக்கும் படம்  'எதற்கும் துணிந்தவன்'.  பசங்க-2 படத்தை தொடர்ந்து பாண்டிராஜ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக சூர்யா நடித்திருக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கிறது.  இப்படத்தில் வினய் ராய் , பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி, M.S. பாஸ்கர்ஜெயப்பிரகாசு, தேவதர்சினி, சுப்பு பஞ்சு அருணாச்சலம், இளவரசு ஆகியோர் நடித்துள்ளனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மதுரை திரையரங்கில் வெளியான சூரரைப்போற்று!


டி.இமான் இசையமைத்துள்ள இந்த படத்தில் இருந்து வெளியான  'வாடா தம்பி', 'உள்ளம் உருகுதையா', 'சும்மா சுர்ருன்னு'  போன்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.  தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் என அனைத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது.  சிறந்த பேமிலி எண்டெர்டெயினராக உருவாகியுள்ள இந்த படமும் ரசிகர்களை திருப்திபடுத்துவதோடு, சூர்யாவின் திரைப்பயணத்தில் வெற்றி வாகை சூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.



பிப்ரவரி மாதம் இப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்த நிலையில் கொரோனா கட்டுப்பாட்டின் காரணமாக திரையரங்குகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்தது.  அதன் பிறகு ஊரடங்கு தளர்வுகள் அளிக்கப்பட்டு  திரையரங்குகளில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டதை தொடர்ந்து படத்தை மார்ச் மாதம் 10ம் தேதி வெளியிட போவதாக படக்குழு அறிவிப்பினை வெளியிட்டது.


 



தற்போது மீண்டும் படத்தின் ரிலீஸ் தேதியை உறுபடுத்தும் விதமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு இடத்தின் ரிலீஸ் தேதியை உறுதி செய்திருக்கிறது.  மேலும் சமீபத்தில் படக்குழு இப்படத்தின் டீசரை வெளியிட்டது, இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களை கடந்து, ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.


மேலும் படிக்க | ஜோதிகாவுடன் அமெரிக்கா செல்லும் சூர்யா..! இதுதான் காரணம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR