Ethirneechal Serial Update: மிகவும் பிரபலமான எதிர்நீச்சல் சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வர போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் இந்த தொடரை ரசித்துப் பார்க்கும் ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்பதை இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எதிர்நீச்சல் சீரியல்:
தமிழ் தொலைக்காட்சி தொடர்களுள் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல் (Ethirneechal Serial) சீரியல் ஆகும். இந்த தொடரை திருசெல்வம் இயக்கி வருகிறார். பெண்களுக்கு எதிரான அடக்கு முறைகளையும் அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிக்கிறது இந்த எதிர்நீச்சல் தொடர். இந்த சீரியலில் நடித்து வரும் அனைவரின் கதாபாத்திரமும் ரசிகர்களை ஈர்த்துள்ளது. குறிப்பாக மறைந்த நடிகர் மாரிமுத்துக்கு தனி மவுசு இருந்தது என்று தான் கூற வேண்டும். அதுமட்டுமின்றி எதிர்நீச்சல் சீரியல் பற்றி சின்னத்திரை வட்டாரத்திலும் அதிகமாக பேசப்படுகிறது. அந்த அளவிற்கு இந்த சீரியல் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறது. அதனாலையே டிஆர்பியில் முன்னணி இடத்தை பிடித்துக் கொண்டிருக்கிறது இந்த சீரியல். மேலும் இந்த சீரியல் மற்ற சீரியல்களை போல இல்லை என்றும் அவ்வபோது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். 


எதிர்நீச்சல் சீரியல் நடிகர் - நடிகைகளின் விவரம்:
இதனிடையே இந்த சீரியலில் மறைந்த மாரிமுத்துவின் சாயலில் இருக்கும் வேல ராமமூர்த்தியை குணசேகரன் ஆக நடித்து வருகிறார். மேலும் இந்த சீரியலில் இவர்களுடன் கனிகா, காயத்ரி கிருஷ்ணன், விமல் ராஜ், சத்யா தேவராஜ், ரித்திக் ராகவேந்திரா, விபுராமன், ஹரிப்ரியா, கமலேஷ், பிரியதர்ஷினி, சபரி, மதுமிதா, சத்யபிரியா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் வெற்றி பெறுவாரா? பதிலளிக்க மறுத்த ரஜினிகாந்த் 


முடிவுக்கு வரும் சீரியல்:
பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டது வரும் சீரியல் குறித்து தற்போது மிகப்பெரிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதன்படி எதிர்நீச்சல் தொடர் தற்போது முடிவுக்கு வர இருக்கிறதாம். வரும் ஜுன் மாதம் இந்த தொடரின் கிளைமேக்ஸ் காட்சிகள் இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் இந்த செய்தி எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் சீரியல் முடிவுக்கு வருகிறது என்ற செய்தியே ரசிகர்களுக்கு கொஞ்சம் அதிர்ச்சியை தந்துள்ளது.



நடிகை சத்யபிரியா போஸ்ட்டால் பரபரப்பு:
இந்த நிலையில் தற்போது எதிர்நீச்சல் சீரியலில் விசாலாட்சியாக நடிக்கும் நடிகை சத்யபிரியா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு நான் "ஆர்டிஓ ஆபிஸில் இருக்கிறேன். அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று யோசிங்க பார்ப்போம்" என்று கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.


இதற்கு பலரும் தங்களின் கருத்துக்களை கூறி வருகிறார்கள். அதில் அதிகமானோர் எதிர்நீச்சல் சீரியல் முடிவுக்கு வரப்போகிறதா? என்று கேள்வி கேட்க உள்ளனர். அதில் ஒருவர் "எதிர்நீச்சல் சீரியல் முடிய போகுதா? அதற்கு பதில் சொல்லுங்க" என்று கேட்க அதற்கு பதிலளித்துள்ள நடிகை சத்யபிரியா "ya" என்று பதில் கொடுத்திருக்கிறார். இதனால் ரசிகர்களை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.




மேலும் படிக்க | மஞ்சுமல் பாய்ஸ் படக்குழுவினர் மீது மோசடி வழக்கு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ