நடிகர் சூர்யா (Actor Suriya) தற்போது சுதா கொங்கரா இயக்கிய தனது வரவிருக்கும் சூரரைப் போற்று படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கிறார். சூரரைப் போற்று நவம்பர் 12 முதல் OTT இயங்குதளமான அமேசான் பிரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்யப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு தனியார் யுட்யூப் சனாலுக்கு பேட்டி அளித்த நடிகர் சூர்யா., சமீபத்தில் அவர் படத்தில் நடித்த அற்புதமான கதாபாத்திரம் பற்றி மனம் திறந்து பேசினார். இதற்கிடையில் கௌதம் மேனன் மற்றும் வெற்றிமாறனுடன் தனது அடுத்த திட்டங்கள் குறித்தும் பேசினார்!


 


ALSO READ | நீதிமன்றத்தின் நியாயமான உத்தரவுகளை தாழ்மையுடன் ஏற்கிறேன்: நடிகர் சூர்யா


நேர்காணலின் இரண்டாம் பாகத்தில், நடிகர் எவ்வாறு நடிப்புக்கு வர வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் என்பதை திறந்து வைத்துள்ளார். அவரும் அவரது குடும்பத்தினரும் சந்தித்த நிதி நெருக்கடி காரணமாக மட்டுமே, அவர் நடிக்க முடிவு செய்தார் என்று தெரிவித்து இருந்தார். 


அது தவிர, அவரது அரசியல் நுழைவு குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது, உடனடியாக பதிலளித்த சூரிய, தனக்கு தற்போது அரசியலில் நுழைவது தொடர்பாக எந்த யோசனையும் இல்லை என்று பதிலளித்தார்.


 


ALSO READ | நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று” பட வெளியிட்டில் நீடிக்கும் சிக்கல்..!!!