இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில் சமந்தா நடித்து வெளியான படம் தான் சாகுந்தலம். புராண கதையை மையமாக கொண்டு உருவான இந்தப்படம் 3டியில் வெளியானது. 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப்படத்துக்காக சமந்தா 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாகவும் கூறப்படுகிறது. சாகுந்தலம் படத்தின் பிரமோஷனுக்காக சமந்தா மிகவும் மெனக்கெட்டார். பல்வேறு ஊர்களுக்கு பறந்தார். பான் இந்தியா படமாக இந்தப்படம் வெளியானது. சமந்தா இந்தப்படம் வெற்றியடைய வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருந்தார். தனது உடல்நிலையையும் பொருட்படுத்தாமல் பிரமோஷனில் கலந்துகொண்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில மாதங்களாகவே மயோடிசிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா, அதற்கான சிகிச்சையில் உள்ளார். தற்போது உடல்நிலை தேறி வருகிறார். மேலும் அடுத்ததாக காஷ்மீரிலாக படமாக்கப்பட்டு உள்ள காதல் படமான குஷியில், விஜய் தேவரகொண்டாவுடன் நடித்து இருக்கிறார். 


மேலும் படிக்க | ஏன் இஸ்லாமிய பெண்களை மட்டும் இப்படி காட்ட வேண்டும்? கொதிக்கும் தடா ரஹீம்!


இந்த நிலையில் குஷ்பு, நிதி அகர்வால், ஹன்சிகா, நயன்தாரா போன்றவர்களுக்கு தமிழகத்தில் கோயில்கள் உள்ளது போல் தற்போது நடிகை சமந்தாவிற்கு தீவிர ரசிகரால் சொந்த கோயில் கட்டப்பட்டு உள்ளது. ஆந்திராவின் குண்டூர் அருகே பாட்பலா மாவட்டம் அலைபாடு கிராமத்தை சேர்ந்த சந்தீப் எனும் தீவிர ரசிகர் சமந்தாவுக்காக கோவில் கட்டி வருகிறார். இந்த கோவிலின் திறப்பு விழா நாளை நடைபெற இருக்கிறதாம்.


மயோசிடிஸ் நோயால் சமந்தா பாதிக்கப்பட்ட போது, ​​அவர் குணமடைய வேண்டி திருப்பதி, சென்னை, நாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் சென்றார்.



இது குறித்து அவர் கூறும் போது “சமந்தா பிரதிக்ஷா அறக்கட்டளை மூலம் பல சேவைகளை செய்து வருவதை அறிந்து அவர் மீது மதிப்பு அதிகமானது. இதனால் அவருக்கு கோவில் கட்ட நான் தீர்மானித்தேன். இதற்கு எங்கள் வீட்டில் உள்ள ஒரு பகுதியை ஒதுக்கி கோயில் கட்டி வருகிறேன். அதன் இறுதி கட்டப்பணியில் நடைபெற்று வருகின்றன. நாளை திறப்பு விழா நடக்கிறது” என்றார்.


மேலும் படிக்க | ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வராகவனை கைது செய்க... இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு - காரணம் என்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ