Viral!!சென்னை சூப்பர் கிங்க்ஸ் தல தோனி வர்சன் காலா டீசர்
இணையதளத்தை கலக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் தல தோனியின் காலா டீசர் வர்சன்.
'காலா' படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த நிலையில், மார்ச் 1-ம் தேதி வெளியிடப்பட்டது. வெளியான சில நிமிடங்களில் 'காலா' படத்தின் டீசர் யூ-டூப் தளமே முடங்கும் அளவுக்கு ரசிகர்கள் வரவேற்றுக் கொண்டாடினர். சமூக வலைத்தளங்களில் காலா டீசர் தான் ட்ரெண்டிங்கில் இருந்தது.
இந்நிலையில், கடந்த இரண்டு ஐ.பி.எல் சீசனில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, ஐ.பி.எல் 2018 சீசனில் மீண்டும் களமிறங்குகின்றன. இது தமிழக ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை தந்துள்ளது. இதுவரை சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி கேப்டனாக செயல்பட்டு வந்த எம்.எஸ். தோனியை வைத்து காலா படத்தின் டீசர் வர்சனை ரசிகர்கள் உருவாகி உள்ளனர். இது பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.