ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியீடு : 100% காதல்
இப்படத்தின் ஃப்ரஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 10.45 மணிக்கு இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிடுகிறார்.
கிரியேட்டிவ் சினிமாஸ் NY மற்றும் NJ எண்டர்டெயின்மென்ட் ஆகிய இரண்டு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.
ஜி.வி.பிரகாஷுடன் இணைவது மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார் ஷாலினி பாண்டே. இப்படத்திற்கு 100% காதல் பெயரிடப்பட்டுள்ளது. எம்.எம்.சந்திரமெளலி இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக இருக்கிறார். லண்டனில் இப்படத்தின் பெரும்பகுதி காட்சிகளை படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.
இப்படம் 2011-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் நாக சைதன்யா, தமன்னா உள்ளிட்ட பலர் நடிப்பில் தெலுங்கில் வெளியான 100% லவ் படம் சூப்பர் ஹிட்டானது.
தற்போது தமிழ் ரீமேக்கிற்கு '100% காதல்' என பெயரிட்டுள்ளது படக்குழு. இதனை '100% லவ்' இயக்குநர் சுகுமார் தயாரிக்கவுள்ளார். நாயகனாக நடித்து, இசையமைக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.