ஹிந்தியில் வெளியான காலா Teaser - எப்படி இருக்கு தெரியுமா?
ஹிந்தி படத்தின் ``கால` டீஸரினை படக்குழுவினர் வெளியிட்டனர்!
கபாலி படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில், ரஜினிகாந்த், ஹுமா குரேசி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘காலா’. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 27-ம் நாள் திரைக்கு வரும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தனுஷ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், 'வத்திகுச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், ஈஸ்வரிராவ், அருந்ததி, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
முன்னதாக 'காலா' படத்தின் டீசர் மார்ச் 1-ம் தேதி வெளியிடப்படும் என தெரிவித்த நிலையில், காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் காலமானதால் டீசர் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது.
அதை தொடர்ந்து, நேற்று வெளியிடப்பட்ட இப்படத்தின் டீசருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், ஹிந்தியில் உருவாக்கப்பட்ட கால படத்தின் டீஸரினை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.